Thursday, January 17, 2008

Chennai Book Fair 2008 - Day 14

இன்று கூட்டம் குறைவாக இருந்ததால் பதிப்பாளர்கள் பலர் ஏமாற்றம் அடைந்தனர் என்று நான் எழுதி எழுதி, அதைப் படித்து அலுப்பாக இருக்கிறது என்று நண்பரொருவர் சொன்னார். அதனால் மாற்றித் தொடங்குகிறேன். நேற்றே விற்பனை மேல் என்ற அளவில் இன்றைய விற்பனை இருந்தது.

கூட்டம் கூட்டமாகப் பலர் வந்தாலும் விற்பனை என்னவோ மந்தமே. கூட்டம்கூட மாலைக்குப் பின்னரே அதிகமாக இருந்தது. 'காணும்' பொங்கல் கொண்டாடிவிட்டு வந்ததால் புத்தகங்களைக் கண்டு கொண்டாடிவிட்டுச் சென்றனர் மக்கள் என்று ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்.

ஒன்பது மணி வாக்கில் ஒரு அன்பர் ஓடோடி வந்து 'பகவத் கீதையா ஒரு இடத்துல அடுக்கி வெச்சிருந்தாங்க, அங்க புத்தகங்களையே காணமே' என்று வருத்தப்பட்டார். அதைக் கேட்டுக்கொண்டிருந்த விரக்தி அடைந்த பதிப்பாளர் ஒருவரை மனம்தேற்றி அனுப்பிவைத்தேன்.


சில பதிப்பாளர்கள் அவர்களது கருத்துகளைக் கூறியிருக்கிறார்கள். அதை ஒலிக்கோப்பாக ஏற்றியிருக்கிறேன். அவசியம் கேட்கவும்.


இன்றோடு புத்தகத் திருவிழா இனிதே முடிவடைந்தது. சில குறைகள் இருந்தாலும் மொத்தத்தில் பிரம்மாண்டமான ஒரு புத்தகக் காட்சியை நடத்தி முடிப்பது பெரிய செயல்தான். அதற்காக பபாஸிக்கு என் பாராட்டுகள். புத்தகக் காட்சி சில துளிகள் என சில விஷயங்களை எழுத நினைத்திருக்கிறேன். நேரம் இருந்து, மூடும் இருந்தால் எழுதுவேன்.

தொடர்ந்து எல்லா நாள்களும் வந்து புகைப்படங்களைப் பார்த்துச் சென்ற அனைவருக்கும் எனி இந்தியன் சார்பாகவும் என் சார்பாகவும் நன்றி.

பதிவு: ஹரன் பிரசன்னா



சா.கந்தசாமி




அமைச்சர் வேலு





நல்லி குப்புசாமி செட்டியார்

மேலே உள்ள புகைப்படங்களைப் பயன்படுத்துவோர் எனி இந்தியனிடம் முன் அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும்.


akilan kaNNan.WAV

தமிழ்ப்புத்தகாலயம் அகிலன் கண்ணன்



Kalachuvadu kannan...

காலச்சுவடு கண்ணன்



kv_shailaja.WAV

வம்சி - கே.வி.சைலஜா



Manush.WAV

உயிர்மை மனுஷ்யபுத்திரன்



ravi tamilvanan.WA...

மணிமேகலைப் பிரசுரம் ரவி தமிழ்வாணன்




vaikarai.WAV

பொன்னி வெளியீட்டகம் (சாளரம் பதிப்பகம்) - வைகறை

Wednesday, January 16, 2008

Chennai Book Fair 2008 - Day 13

இன்றும் கூட்டம் குறைவாகவே இருந்தது. அதிகக் கூட்டம் வரும் என்று எதிர்பார்த்த பதிப்பாளர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். நாளையோடு புத்தகக் காட்சி முடிவடையும் நிலையில் முதல் ஞாயிறு அன்றும் கழிந்த சனி, ஞாயிறு அன்றும் நடந்த விற்பனை போல மற்ற நாள்கள் விற்பனை இல்லை. நிறைய விடுமுறை நாள்கள் இருந்தும் விற்பனை மந்தமே. இது குறித்து ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னார்கள். இடம் எளிதாக வரும் இடமாக இல்லாதது, பேருந்துகள் சரியாக இல்லாதது, ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கொஞ்சம் தூரம் நடக்கவேண்டியிருப்பது, சங்கமம் நிகழ்ச்சி என பல்வேறு காரணங்களைச் சொன்னார்கள். பபாஸி நிர்வாகம்,ஆறுவழிகளில் கூட்டம் செல்வதால் குறைவாக இருப்பதாகத் தோன்றுவதாகவும், உண்மையில் கூட்டம் அதிகமே என்று சொன்னதாகக் கேள்விப்பட்டேன்.

எப்படியிருந்தாலும் கழிந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு கூட்டம் குறைவு என்பதே என் அபிப்பிராயம்.

நாளை நிறைவுநாள். நாளை எப்படி கூட்டம் வரும், விற்பனை நடக்கும் என்று கணிக்கமுடியாது. குறைவாகவே இருக்கும் என்று பொதுவாகப் பேசிக்கொண்டார்கள் பதிப்பாளர்கள்.

பதிவு: ஹரன் பிரசன்னா


பத்து நிமிடத்தில் படம் வரையும் ஓவியர்




எழுத்தாளர் பவா செல்லத்துரை




பழ. நெடுமாறன்




கவிஞர் வைரமுத்து




வைரமுத்து கையெழுத்திடுகிறார்.




கோபல்ல கிராமம் நூலின் ஆங்கிலப் பதிப்பு வெளியீடு - தமிழினி அரங்கில்




எழுத்தாளர் மணா - பழ.நெடுமாறன்




வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்




எழுத்தாளர் வேதசகாயகுமார்




கி.ரா. - மொழிபெயர்ப்பாளர் சுப்ரமணியன்




புத்தக வெளியீடு


மேலே உள்ள புகைப்படங்களைப் பயன்படுத்துவோர் எனி இந்தியனிடம் முன் அனுமதி பெற்றுப் பயன்படுத்த வேண்டுகிறோம்.

Tuesday, January 15, 2008

Chennai Book Fair 2008 - Day 12

இன்று விற்பனையும் கூட்டமும் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்த்த பதிப்பாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர் என்றே சொல்லவேண்டும். காலையில் கூட்டம் மந்தமாக இருந்தது. மூன்று மணிக்குப் பின்னர் கூட்டம் வரத் தொடங்கியது. அப்போதும் விற்பனை என்னவோ மந்தமாகவே இருந்தது. இன்று வந்த கூட்டம் புத்தகக் காட்சியைச் சுற்றிப் பார்க்க வந்த கூட்டம் போலும். இன்றைக்கு அதிக விற்பனை கேண்டீனில்தான் இருந்திருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

சுஜாதா உயிர்மை அரங்கில் ரசிகர்களுக்குக் கையெழுத்திட்டார். சின்ன நிகழ்ச்சியாக வலைப்பதிவர் வா.மணிகண்டனின் கவிதைத் தொகுப்பான 'கண்ணாடிக்குள் அலையும் வெயில்' புத்தகத்தை சுஜாதா வெளியிட நடிகை ரோகினி பெற்றுக்கொண்டார். சுஜாதாவின் ரசிகர்கள் அவரிடம் வரிசையாகக் கையெழுத்துப் பெற்றார்கள். கடந்தமுறை கடும் கூட்டத்திற்கிடையில் சுஜாதா கையெழுத்திட்டார். இன்றைக்குக் கூட்டம் கொஞ்சம் குறைவாக இருந்ததால், அனைவரும் ஒருவர் பின் ஒருவராக அவரிடம் கையெழுத்துப் பெற்றார்கள். வா.மணிகண்டனுக்கு என் வாழ்த்துகள்.


பதிவு: ஹரன் பிரசன்னா



சாளரம் பதிப்பக அரங்கு




எழுத்தாளர், பத்திரிகையாளர் மணா




எழுத்தாளர் ராஜ சுந்தரராஜன்




எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன்




மக்கள் தொலைக்காட்சியில் கருத்துக் கேட்பு




சுஜாதாவிடம் மக்கள் தொலைக்காட்சி கருத்துக் கேட்பு, உடன் கவிஞர் மனுஷ்யபுத்திரன்




கையெழுத்திடும் சுஜாதா




மனுஷ்ய புத்திரன் - வா.மணிகண்டன் - சுஜாதா




சுஜாதா நூலை வெளியிட ரோகினி பெற்றுக்கொள்கிறார்




அன்னா கண்ணன்





இயக்குநர் பாலுமகேந்திரா - கவிஞர் பிரான்ஸிஸ் கிருபா




கவனத்தைக் கவர்ந்த தட்டியின் ஒரு பக்கம்




கவனத்தைக் கவர்ந்த தட்டியின் மறுபக்கம்



மேலே உள்ள புகைப்படங்களைப் பயன்படுத்துவோர் எனி இந்தியனிடம் முன் அனுமதி பெறுமாறு வேண்டுகிறோம்.

Monday, January 14, 2008

Chennai Book Fair 2008 - Day 11

இன்று கூட்டம் குறைவாகவே இருந்தது. விற்பனையும் மந்தம். இன்று முழுநாள் வைத்ததில் எப்பயனும் இல்லை என்று பல பதிப்பாளர்கள் கருத்து தெரிவித்தார்கள். ஒரு சில பதிப்பாளர்கள் கடைகளை மதியம்தான் திறந்தார்கள். கொஞ்சம் கூட்டமும் இரண்டு மணிக்கு மேல்தான் வரத்தொடங்கியது. காலை பதினோரு மணிக்குத் தொடங்கும் என்கிற விவரம் பதிப்பாளர்களைத் தவிர மக்களுக்கு எட்டாதது ஒரு காரணமாக இருக்கலாம்.

மாலை கூட்டம் வராததற்கு, மோடி வருகையினால் ஏற்படுத்தப்பட்ட பலத்த பாதுகாப்பும் அதன் காரணமாக ஏற்பட்ட வாகன நெரிசலும் காரணம் என்று ஒருசிலர் கூறினார்கள்.

விழா பொது அரங்கில் கிழக்கு பதிப்பகத்தின் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

பதிவு: ஹரன் பிரசன்னா



லலிதா ராம்




கவிஞர் தேவதேவன்




எழுத்தாளர் க.மோகனரங்கன்




எழுத்தாளர் வெங்கடேசன்




சீனி விசுவநாதன்




கிழக்கு பதிப்பக புத்தக வெளியீட்டு விழா மேடை




பத்ரி, செண்பகா பதிப்பகம் சண்முகம், நல்லி குப்புசாமி செட்டியார்




சொக்கன் - பா.ராகவன்




ப்ரவாஹன்




சுரேஷ் கண்ணன் - அ.முத்துகிருஷ்ணன்




எழுத்தாளர் சு.வேணுகோபால்


புகைப்படங்களைப் பயன்படுத்துவோர் எனி இந்தியனிடம் முன் அனுமதி பெறுமாறு வேண்டுகிறோம்.

Sunday, January 13, 2008

Chennai Book Fair 2008 - Day 10

இன்று கடுமையான கூட்டம். எல்லா பதிப்பாளர்களுக்கும் நல்ல விற்பனை என்று கேள்விப்பட்டேன்.

பொது அரங்கில் விஜய் டிவியின் 'நீயா நானா' புகழ் கோபி பேசினார்.

நிறைய இலக்கியவாதிகளையும் நிறைய வலைப்பதிவுலக நண்பர்களையும் பார்க்கமுடிந்தது.

நாளையும் காலை 11.00 மணிக்கே புத்தகக் காட்சி தொடங்கும் என்று அறிவித்திருக்கிறார்கள். இன்றளவு கூட்டம் நாளை வருமா எனத் தெரியவில்லை என்றாலும், நாளை அரசு விடுமுறை நாளாதலால் கூட்டம் நிறைய இருக்கும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

பதிவு: ஹரன் பிரசன்னா


கவிஞர் மனுஷ்ய புத்திரன்




டாக்டர் ருத்ரன்




அபுல்கலாம் ஆசாத் - சந்திரசேகரன் கிருஷ்ணன்




வலைப்பதிவர் வா.மணிகண்டன் (இடதுபக்கம் இருப்பவர்)





எழுத்தாளர் எஸ். சங்கர நாராயணன்




வேல்முருகன் எம்.எல்.ஏ - கவிஞர் அறிவுமதி




எழுத்தாளர் நரசய்யா




நாஞ்சில் நாடன் - சுகா - ஜெயமோகன்




எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் (இடது கைப்பக்கம் இருப்பவர்)





எழுத்தாளர் கி.ராஜநாராயணன்




பாப் மனோகரன்




வலைப்பதிவுலக நண்பர்கள் லக்கிலுக், தங்கவேல், நடராஜன் ஸ்ரீனிவாசன், பாலபாரதி, முரளி கண்ணன், மா.சிவகுமார் மற்றும் நண்பர்கள்.


மேலே உள்ள புகைப்படங்களைப் பயன்படுத்த விரும்புவோர் என் இந்தியனிடம் முன் அனுமதி பெறுமாறு வேண்டுகிறோம்.