Tuesday, January 8, 2008

Chennai Book Fair 2008 - Day 05

இன்றும் கூட்டம் குறைவாகவே இருந்தது. விற்பனையும் மந்தமாகவே இருந்தது. இன்றைய முக்கிய அம்சம், முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் தலைமையில் நடந்த பொற்கிழி வழங்கும் விழா. ஐந்து எழுத்தாளர்கள் பெற்றுக்கொண்டார்கள். கருணாநிதி பேசும்போது கடந்த ஆண்டு சொன்ன வாக்குறுதிகளில் சில நிறைவேற்றப்பட்டுவிட்டதாகவும், சில நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றும் கூறினார். கோட்டூர்ப்புரத்தில் உலகத் தரத்தில் நூலகம் அமையும் என்றும் அதற்கான டெண்டர் விடப்பட்டுவிட்டதாகவும் இடம் தெரிவு செய்யபப்ட்டுவிட்டதாகவும் கூறினார். நிரந்தர புத்தகக் கண்காட்சிக்கான இடத்தை, பபாஸி தேர்ந்தெடுத்ததும் அதற்கு வேண்டியவற்றையும் அரசு ஆவண செய்யும் என வாக்குறுதி அளித்தார்.

இனி புத்தகக் காட்சி என்றழைக்க்கூடாது என்றும் புத்தகப்பூங்கா என்றழைக்கவேண்டுமென்றும் வேண்டுகோள் வைத்தார்.

பதிவு: ஹரன்பிரசன்னா

CM Speech.WAV

முதல்வரின் பேச்சு (நேரடியாகக் கேட்கமுடியவில்லை என்றால் http://www.esnips.com/doc/5ff8faa1-d596-4bfc-952b-76ed67ae91bd/CM-Speech என்கிற இடத்தில் சென்று கேட்கவும்.)





கல்யாண்ஜி @ வண்ணதாசன்



மதுரபாரதி



நடிகர் கருணாஸ்



பொல்லாதவன் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன்



பொற்கிழி வழங்கும் விழா மேடையில் முதல்வர் கருணாநிதி



காலச்சுவடு அரங்கில் கவிஞர் தேவதேவன், கவிஞர் ஆனந்த், எழுத்தாளர் ஹனீபா



காலச்சுவடு கண்ணன்



வர்த்தமானன் பதிப்பகம்



மேலே உள்ள புகைப்படங்களைப் பயன்படுத்துவோர் எனி இந்தியனிடம் முன் அனுமதி பெறும்படி வேண்டுகிறோம்.

No comments: