Tuesday, December 30, 2008

ஜனவரி 2009 'வார்த்தை' இதழில்





இன்னுயிர் தந்து எமை ஈன்று வளர்த்து அருளீந்ததும் இந்நாடே! - பி.கே. சிவகுமார்

கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ்

வாசகர் கடிதங்கள்

விளக்கு பரிசு - வெளி ரங்கராஜன்

அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன்

மலேசியாவில் யோகாவுக்குத் தடை: தேநீர்க் கோப்பைக்குள் புயல் - ரெ. கார்த்திகேசு

மரபூமி - சுப்ரபாரதிமணியன்

ரிச்சர்ட் டாகின்ஸ்: அறிவியலின் பதிலடி - துக்காராம் கோபால்ராவ்

பேராசையெனும் பெருநோய்: அமெரிக்க பொருளாதாரச் சிக்கல் குறித்தான சில எண்ணங்கள் - நரேந்திரன்

வரப்பெற்றோம் (புத்தக விவரங்கள்)

தாமரை தேடிய படலம் - வா.மு. கோமு

அரவாணிகளின் பழமரபே: நிர்வாணம் செய்தல் சடங்கு - வெ. முனிஷ்

ஆள்காட்டி - ந. செந்தில்குமார்

மிண்டோ மார்லி - அம்பேத்கார் - வி.பி. சிங் - மும்பை தாஜ் ஹோட்டல் - கே.எம். விஜயன்

ஜெயா நீ ஜெயிச்சுட்டே - சுகா

தேவதேவன், பா. சத்தியமோகன், அய்யப்ப மாதவன் கவிதைகள்

குட்டப்பன் கார்னர் ஷோப் - இரா. முருகன்

பதுமைப் பெண்கள் - பிர்தவ்ஸ் ராஜகுமாரன்

எதைப் பற்றியும் (அல்லது) இது மாதிரியும் தெரிகிறது - வ. ஸ்ரீநிவாசன்

அமெரிக்காவில் ஜெயகாந்தன் (புத்தக விமர்சனம்) - அம்ஷன் குமார்

எதிர்காலம் என்று ஒன்று: அச்சம் அல்லது நம்பிக்கையின் பிரதிபலிப்புகள் (புத்தக விமர்சனம்) - வே. சபாநாயகம்

மச்சு வீடு - எஸ். ஜெயஸ்ரீ

ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி

ஓவியங்கள்: ஜீவா

Tuesday, November 25, 2008

டிசம்பர் 2008 'வார்த்தை' இதழில்...




சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் - பி.கே. சிவகுமார்

கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ்

வாசகர் கடிதங்கள், எதிர்வினை

அன்பான சஹிருதயரே! (ஜெயகாந்தன் கேள்வி-பதில்)

சந்திரயான் - இந்தியாவின் முதல் விண்கலம் - துக்காராம் கோபால்ராவ்

ஆற்றில் குளிப்பது எப்படி? - அசோகமித்திரன்

தமிழ்நடை மீட்சி - மணி வேலுப்பிள்ளை

ஒரு களியாட்டம்! - எஸ். அர்ஷியா

பின்நவீன இஸ்லாமிய கதையாடல்கள் - ஹெச்.ஜி. ரசூல்

குட்டப்பன் கார்னர் ஷோப் - இரா. முருகன்

வணக்கம் சாந்தாம்மா! (நேர்காணல்) - மதுமிதா

தமிழ்நாட்டு அரசியலின் மானக்கேடு கொடிகட்டிப் பறக்கும் சட்டக் கல்லூரி சம்பவம் - கே.எம். விஜயன்

லஷ்மி சாகம்பரி, நெய்வேலி பாரதிக்குமார், வே. முத்துக்குமார், கென் கவிதைகள்

எதைப் பற்றியும் (அல்லது) இதுமாதிரியும் தெரிகிறது - வ. ஸ்ரீனிவாசன்

முருகன் சாமி பேரு - சுகா

நீர்வளையத்தின் நீள் பயணம்... - அரவிந்தன்

'வாஸந்தி கட்டுரைகள்’ தரும் புதிய தரிசனங்கள் (புத்தக விமர்சனம்) - வே. சபாநாயகம்

மாத்தா ஹரி (புத்தக விமர்சனம்) - கி. அ. சச்சிதானந்தம்

ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி

ஓவியங்கள் - ஜீவா

Monday, November 3, 2008

குமுதம் 05.11.08 இதழில் அரசு பதில்கள் பகுதியில் 'வார்த்தை'...

வார்த்தை அக்டோபர் 2008 இதழில், 'குமுதத்துக்கு ஆதரவாக ஒரு குரல்' தலைப்பில் துகாராம் கோபால்ராவ் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி, குமுதம் வார இதழின் அரசு பதில்கள் பகுதியில் வெளியாகியுள்ளது.




Sunday, October 26, 2008

நவம்பர் 2008 'வார்த்தை' இதழில்...




ஜீவா ஓவியங்களுடன்


நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக! அறம் வளர்ந்திடுக! - பி.கே. சிவகுமார்

கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ்

வாசகர் கடிதங்கள்

அன்பான சஹிருதயரே - ஜெயகாந்தன் (கேள்வி பதில்)

தொப்பியணிந்த தெருவிளக்குகள் - அசோகமித்திரன்

எனது இந்தியா - ஜெயமோகன்

ஆவணிப் பிறப்பு - நீல பத்மநாபன்

அறையில் ஒருநாள் - ச. மனோகர்

மணற்கன்னி - உமா மகேஸ்வரி

இலக்கியத்துக்கான நோபல் பரிசுள்: தமிழ் சார்ந்து சில சிந்தனைகள் - தமிழவன்

Giant வீல் - சுகா

எதுகை மோனையும் எலெக்ட்ரிக் வினையும் - க.சீ. சிவகுமார்

தி.க.சி. பற்றிய ஆவணப்பட வெளியீட்டு விழா (நிகழ்வு) - நற்பவி

வைதீஸ்வரன், க. அம்சப்ரியா, வெய்யில், சி. வெங்கடேஷ், எஸ். செந்தில்குமார், தபசி, தூரன் குணா கவிதைகள்

சீனாவின் வீகர் இன இஸ்லாமியர் மீதான அடக்குமுறையும் மனித உரிமைகளும் - துக்காராம் கோபால்ராவ்

தூங்காமத் திரியறாங்க - வா.மு. கோமு

பயங்கரவாதமும் சட்ட நடவடிக்கையும் - கே.எம். விஜயன்

குட்டப்பன் கார்னர் ஷோப் - இரா. முருகன்

மதம்: மரபும் நவீன மதிப்பீடுகளும் - க. மோகனரங்கன் (சாந்திநாத தேசாய் எழுதி, பாவண்ணன் மொழிபெயர்த்த ஓம் நமோ நாவல் விமர்சனம்)

படைப்பிலக்கியத்துக்கு அச்சாரம் - இந்திரா பார்த்தசாரதி (பி.கே. சிவகுமாரின் அட்லாண்டிக்குக்கு அப்பால் புத்தக விமர்சனம்)

எதைப் பற்றியும் (அல்லது) இதுமாதிரியும் தெரிகிறது - வ. ஸ்ரீநிவாசன்

பூனைக்குட்டிகள் - ஜெயஸ்ரீ

அது இது - தமிழ்மகன்

ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி

Friday, October 3, 2008

துக்ளக் வார இதழில் 'உயிர்த்தலம்' புத்தக விமர்சனம்

துக்ளக் 8.10.2008 தேதியிட்ட இதழில், எனி இந்தியன் பதிப்பகம் வெளியிட்ட 'உயிர்த்தலம்' புத்தகம் பற்றிய விமர்சனம் வெளியாகியுள்ளது. எழுதியவர்: பரக்கத்.


Friday, September 26, 2008

அக்டோபர் 2008 'வார்த்தை' இதழில்...


வாழ்க நீ எம்மான்...! - பி.கே. சிவகுமார்

கார்ட்டூன் - துகாராம் கோபால்ராவ்

வாசகர் கடிதங்கள்

பார்வைக்கோணம்: முத்துலிங்கத்தின் வெளி (சென்ற இதழில் வெளியான அ.முத்துலிங்கம் சிறுகதை குறித்து) - மு. இராமனாதன்

வார்த்தை: ஆசிரியத்துவ நிலைப்பாடு - ஒரு கடிதம் - தமிழவன்

அன்பான சஹிருதயரே (கேள்வி பதில்) - ஜெயகாந்தன்

பட்டாளத்துக்குப் போனவன் - அசோகமித்திரன்

தொலைவெளி நெருக்கம்: எங்கோ... யாரோ... யாருக்காகவோ... - சுகுமாரன்

புதுக்கவிதையில் தொடரும் அர்த்தக்குறிகள் - தமிழவன்

எழுபது ரூபாய் - ஜெயந்தி சங்கர்

நாடகத்தின் புதிய பயன்பாடுகள் - வெளி ரங்கராஜன்

வணக்கம் தமிழச்சி! (சென்ற இதழில் வெளியான நேர்காணலின் தொடர்ச்சி) - மதுமிதா

எதைப் பற்றியும் (அல்லது) இதுமாதிரியும் தெரிகிறது - வ. ஸ்ரீநிவாசன்

இசையைச் செதுக்கும் சிற்பிகள் - சேதுபதி அருணாசலம்

தேவதேவன், வைதீஸ்வரன், அ. பிரபாகரன், புவனராஜன், நிலாரசிகன் கவிதைகள்

டெலி·போன் ஒட்டுக் கேட்டலும் மனிதனின் அந்தரங்க உரிமையும் - கே.எம். விஜயன்

பட்ட கடன் - உஷா தீபன்

க்ளோ - சுகா

மூன்றாம் உலகமும் மாற்று கோட்பாடும்: சமீர் அமீன் பற்றிய அறிமுகக் குறிப்புகள் - எச். பீர்முஹம்மது

குட்டப்பன் கார்னர் ஷோப் - இரா. முருகன்

குமுதத்துக்கு ஆதரவாக ஒரு குரல் - துகாராம் கோபால்ராவ்

ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி

புதிதாய்ப் படிக்க... (புத்தக அறிமுகங்கள்)

Tuesday, September 2, 2008

குருவும் சீடனும் - ஞானத் தேடலின் கதை

அமுதசுரபி செப்டம்பர் 2008 இதழில், எனி இந்தியன் பதிப்பகத்தின் வெளியீடான 'குருவும் சீடனும்' புத்தகத்தின் மதிப்புரை வெளியாகியுள்ளது. மதிப்புரை வழங்கியவர்: அசோகமித்திரன்




நன்றி: அமுதசுரபி

அம்ருதா இதழில் 'வாஸந்தி கட்டுரைகள்' புத்தக விமர்சனம்

அம்ருதா ஆகஸ்ட் 2008 இதழில், எனி இந்தியன் பதிப்பகம் வெளியிட்ட 'வாஸந்தி கட்டுரைகள்' புத்தகம் பற்றிய விமர்சனம் வெளியாகியுள்ளது. எழுதியவர்: பேரா. க. பஞ்சாங்கம்.







நன்றி: அம்ருதா இதழ்.

செப்டம்பர் 2008 'வார்த்தை' இதழில்...




கொலையிற் கொடியாரை வேந்துஒறுத்தல் - பி.கே. சிவகுமார்

துகாராம் கோபால்ராவ் கார்ட்டூன்

வாசகர் கடிதங்கள்

ஜூலையில் வெளியான கோபால் ராஜாராமின் அணுசக்தி கேள்வி-பதிலுக்குப் ப்ரவாஹன் எதிர்வினை

ப்ரவாஹனுக்குக் கோபால் ராஜாராமின் பதில்

அன்பான சஹிருதயரே (ஜெயகாந்தன் கேள்வி-பதில்)

காவலன் காவான் எனின் - நாஞ்சில் நாடன்

ஆப்பிரிக்கப் பஞ்சாயத்து - அ. முத்துலிங்கம்

தொலைவெளி நெருக்கம்: வெண்ணிற வெப்பம் - சுகுமாரன்

சட்டத்தில் விசாரணைக் கைதியின் மனித உரிமை - கே.எம். விஜயன்

மொழிபெயர்ப்பாளர் - மணி வேலுப்பிள்ளை

சுட்டாச்சு தங்கம் - டைனோ

வணக்கம் தமிழச்சி! - மதுமிதா (நேர்காணல்)

சுதேசி பத்திரிகைகள் கடத்தலில் பாரதி - வி. வெங்கட்ராமன்

உமா மகேஸ்வரி, தாரா கணேசன், நிர்மலா கவிதைகள்

அகதை அல்லது கதையிலிருந்து கதையைக் கழற்றியெறிந்த கதை - கீரனூர் ஜாகிர் ராஜா

குட்டப்பன் கார்னர் ஷோப் - இரா. முருகன்

நவீன தமிழ் நாடகமும் பார்வையாளர்களும் (வெளி இதழ்த்தொகுப்பு விமர்சனம்) - அம்ஷன் குமார்

கடவுளிடம் இருந்த கடைசி சைக்கிள் - கே. பாலமுருகன்

எதைப் பற்றியும் (அல்லது) இதுமாதிரியும் தெரிகிறது - வ. ஸ்ரீனிவாசன்

தாழம்பூ - எஸ். ஜெயஸ்ரீ

புதிதாய்ப் படிக்க புத்தக அறிமுகங்கள்

தாயார் சன்னதி - சுகா

ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி

Thursday, July 31, 2008

திரு. பாலபாரதிக்கு...

தொடர்புடைய பாலபாரதியின் பதிவு இங்கே.


திரு. பாலபாரதிக்கு,

புதிய புத்தகங்களை எனிஇந்தியன்.காமில் மாதம் இருமுறை (முதல், பதினைந்து தேதிவாக்கில்) வலையேற்றுகிறோம். எங்கள் வலைத்தளத்தில் இல்லாத புத்தகங்களைக்கூட Custom Order வழியாக வாங்க முடியுமென்பதால் புதிய புத்தகங்களை மாதம் இருமுறை மட்டுமே வலையேற்றுவதால் நுகர்வோருக்குச் சிரமம் ஏதுமில்லை. ஆனாலும், நண்பர்கள் மற்றும் பதிவர்கள் புத்தகங்கள் எழுதி அதை எனிஇந்தியனில் விற்கச் சொல்லும்போது, கூடுமானவரை அவர்களுக்கு உதவியே வந்துள்ளோம். மேலும், வலைப்பதிவர்கள் எழுதிய புத்தகங்களை எனிஇந்தியன்.காமின் முதல் பக்கத்தில் வைத்து ஆதரவளித்திருக்கிறோம். (உதாரணம்: மயிலிறகால் ஒரு காதல், சித்திரம் கரையும் வெளி, மருதம், கஜல், கானா, மு.க.)

'அவன் - அது = அவள்' என்கிற உங்கள் புத்தகம் எங்கள் கைகளுக்கு ஜூலை பதினைந்தாம் தேதிக்குப் பின்னரே பதிப்பாளர் மூலம் வந்தது. அதனால் அடுத்தமுறை புத்தகங்களை வலையேற்றும்போது (ஆகஸ்ட் 1 வாக்கில்) வலையேற்ற முடிவுசெய்யலாம் என்றிருந்தோம். நீங்கள் என்னைத் தொலைபேசியில் 25ம் தேதி (காலை 11:30 மணிக்கு) அழைத்து அப்புத்தகத்தை எனிஇந்தியன்.காமில் ஏற்றச் சொன்னீர்கள். அப்போதே நான் உங்களிடம் 'வார்த்தை' இதழ் தயாரிப்பில் இருக்கும் வேலைப்பளுவையும் பரபரப்பையும் சொல்லி, ஆனாலும் இரண்டு நாள்களில் ஏற்றுவதாகச் சொன்னேன். பதினைந்து நாள்களுக்கொருமுறை மட்டுமே நாங்கள் வலையேற்றுவதென்றாலும், நீங்கள் அழைத்தபோது இரண்டு நாள்களில் ஏற்றுவதாகச் சொன்னேன். அப்போது நீங்கள் இன்னும் அவசரம் என்று சொன்னபோது, இயன்ற அளவு எவ்வளவு சீக்கிரம் ஏற்ற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வலையேற்றுகிறேன் என்றே சொன்னேன். அதன் பின்னர், உங்கள் புத்தகத்தின் தலைப்பு 'அவன் - அது = அவள்' என்பது insensitive ஆக இருப்பதோடு மட்டுமில்லாமல் திருநங்கைகளையும் பெண்களையும் அவமதிப்பதாகவும் இருக்கிறதோ என்ற கேள்வி எழுந்தது. உங்கள் புத்தகம் திருநங்கைகளுக்கு ஆதரவானது என்றாலும் ஆண் பாலியல் குறி இல்லையென்றால் பெண் என்ற பொருள் வரும் அவன் - அது = அவள் என்ற தலைப்பு தங்கள் உணர்வுகளைப் புண்படுத்துகிறது என்று பெண்களும் திருநங்கைகளும் சொல்லக் கூடுமோ என்று எனிஇந்தியன் நிர்வாகம் யோசித்தது. அதனாலேயே உங்கள் புத்தகத்தை வலையேற்றுவது குறித்து முடிவு செய்ய இரண்டு நாட்களுக்கு மேலானது.

புத்தகங்களை வலையேற்றுவது குறித்து வரையறுக்கப்பட்டிருக்கிற திட்டப்படி எனிஇந்தியன்.காம் செயற்படுகிறது. ஆனாலும் பல நேரங்களில் பதிப்பாளர்களுக்கும் நண்பர்களுக்கும் இவ்விஷயத்தில் உதவும்பொருட்டுச் சிலநேரங்களில் புத்தகங்களை மாதத்தில் பலமுறைகூட வலையேற்றுகிறோம். இப்படிப் பலமுறை வலையேற்றுவது எங்களுக்கு இருக்கும் நேரத்தைப் பொருத்தது. ஆனால், இதுகுறித்து யாரும் எனிஇந்தியன்.காமுக்கு நெருக்குதல் தருவது சரியில்லை. புத்தகங்களை உடனடியாக வலையேற்ற வேண்டும் என்ற தங்கள் அவஸ்தையில் நாங்கள் பதினைந்து நாட்களுக்கு மேலாக புத்தகங்களை வலையேற்றாமல் அவதிப்பட்டதாகத் தாங்கள் சொல்வது உண்மையில்லை.

நாங்கள் முடிவெடுப்பதற்குள் தாங்கள் முடிவுசெய்து புத்தகம் வேறு தளங்களில் கிடைக்கும் என்று அறிவித்த செய்தியை வாசித்தோம். தங்கள் புத்தகம் அத்தளங்களின் வழியே சிறப்பாக விற்பனையாகவும் வெற்றியடையவும் எனிஇந்தியன்.காமின் வாழ்த்துகள்.

ஹரன் பிரசன்னா
இயக்குநர்
எனிஇந்தியன்.காம்

Wednesday, July 9, 2008

'வார்த்தை' ஜூலை 2008 இதழில்...


* தாய்நாட்டன்புறு தனையர் இங்கிருமின் (அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தம்) - கோபால் ராஜாராம்

* சரஸ்வதி வ. விஜயபாஸ்கரன், ஜெயகாந்தன், கே.எம். விஜயன் உள்ளிட்ட பலர் எழுதிய வாசகர் கடிதங்கள்

* சென்ற இதழில் வெளியான கே.எம். விஜயன் கட்டுரைக்குப் ப. திருமாவேலனின் எதிர்வினை

* தொலைவெளி நெருக்கம்: கவிதையின் கை - சுகுமாரன்

* சு. வெங்கடேசனின் 'உ.வே.சா. சமயங் கடந்த தமிழ்' - கோ.ந. முத்துக்குமாரசுவாமி

* மே தெல்மிசானியின் துன்யாசத் - தமிழில்: அ. கிரிதரன் ராஜகோபாலன்

* எதைப்பற்றியும் (அல்லது) இது மாதிரியும் தெரிகிறது - வ. ஸ்ரீனிவாசன்

* தமிழில் தோன்றிய புதுவகை இயக்கமும், சில விமர்சனங்களும் தாத்பரியங்களும் - தமிழவன்

* பெ.சு. மணியின் நீதிக்கட்சியின் திராவிடன் நாளிதழ் ஓர் ஆய்வு - கல்பனாதாசன்

* சொப்பு விருந்து - எஸ். ஷங்கர நாராயணன்

* சுதந்திரப் போராட்டக் களத்திலிருந்து: பாரதியின் பாஞ்சாலி சபதம் சுதேசிப் போராட்டத்தின் புரட்சிக்களம் - வி. வெங்கட்ராமன்

* விஞ்சை விலாஸின் சுவை - சுகா

* கலாப்ரியா, தாராகணேசன், கே. பாலமுருகன், பா. சத்தியமோகன், முத்துக்குமார் கவிதைகள்

* ஆபிதினின் 'உயிர்த்தலம்': பொங்கிவழியும் அங்கதமும் நீண்டு செல்லும் கதையாடலும் - கீரனூர் ஜாகீர் ராஜா

* பாலரிஷி - சுப்ரபாரதிமணியன்

* வேணுகோபால் Vs அன்புமணி: தனிமனித அடிப்படை உரிமையும் யதேச்சதிகார ஜனநாயகமும் - கே.எம். விஜயன்

* நேபாளம் - எச்சரிக்கை இணைந்த எதிர்பார்ப்பு - கோபால் ராஜாராம்

* ஆர். வைத்தியநாதனின் ஜாதி என்னும் சமூக மூலதனம் (ஏன் கவுண்டர்கள், நாடார்கள், மார்வாரிகள், கச்சிகள் ஆகியோர் சிறப்புடன் வாழ்கிறார்கள்?) - தமிழில்: துகாராம் கோபால்ராவ்

* குட்டப்பன் கார்னர் ஷோப் - இரா. முருகன்

* இசையின் விதையும் விதையின் இசையும் - சேதுபதி அருணாசலம்

* தேடலின் தடங்கள் (பாவண்ணனின் 'துங்கபத்திரை') - எஸ். ஜெயஸ்ரீ

* ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி


இவற்றோடு-



* கார்ட்டூன்

* புதிதாய்ப் படிக்க

* மாவோயிஸ்டு தியாகு சமீபத்தில் ஜெயகாந்தனைப் பற்றிச் சொன்ன கருத்துகள் தொடர்பான கேள்விகளுக்கு ஜெயகாந்தனின் பதில்கள்

வார்த்தை ஜூன் 2008 இதழில்...



* வாசகர் கடிதங்கள்

* மே இதழில் வெளியான வெளி ரங்கராஜனின் கட்டுரைக்கான கோ.ந. முத்துகுமார சுவாமியின் எதிர்வினை

* மொசுறு - நாஞ்சில் நாடன்

* தொலைவெளி நெருக்கம்: சொல்லுக்குள் பாயும் எரிமலைக் குழம்பு - சுகுமாரன்

* இரண்டே அறைகள் கொண்ட வீடு - யுவன் சந்திரசேகர்

* சுதந்திரப் போராட்டக் களத்திலிருந்து: தேசியம் வளர்த்த 'சங்கு'வின் எழுச்சியும் வீழ்ச்சியும் - வி. வெங்கட்ராமன்

* கிரீமி லேயர் பட்டியல் - தமிழில்: ஹரன் பிரசன்னா

* இடஒதுக்கீடு: மாயைகளால் மறைக்கப்படும் உண்மை - சாவித்திரி கண்ணன்

* இடஒதுக்கீடு அரசியல் - கே.எம். விஜயன்

* நோவா (அறிவியல் புனைகதை) - தமிழ்மகன்

* சாலை விபத்துகளும் தமிழ் சினிமாவும் - வெளி ரங்கராஜன்

* ·பிரான்சில் என்ன நடக்கிறது - நாகரத்தினம் கிருஷ்ணா

* ஊடுருவிப் பார்க்கும் கண்கள் (பாவண்ணனின் நதியின் கரையில்) - எஸ். ஜெயஸ்ரீ

* எதைப் பற்றியும் அல்லது இதுமாதிரியும் தெரிகிறது. வ. ஸ்ரீனிவாசன்

* அனிதா. ச. முத்துவேல், வே. முத்துக்குமார், மதுமிதா, க. அம்சப்பிரியா, செந்தமிழ் மாரி கவிதைகள்

* மாற்றம் - பொன்னையன்

* குட்டப்பன் கார்னர் ஷோப் - இரா. முருகன்

* ஒலிம்பிக் பந்தம்: அரசியலும் தேசப்பற்றும் - மு. இராமனாதன்

* ஏ.ஜே.பி. தைலரின் மார்க்சியம் ஒரு மீள்நோக்கு - தமிழில்: மணி வேலுப்பிள்ளை

* ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி


இவற்றோடு -



* "அகண்ட பாரதம், ஒரே கலாசாரம், ஹிந்துத்துவம் கொண்டு எழுதிய விஷ்ணுபுரம், உலகத்திலேயே உயர்ந்த கொள்கைகளைத் தந்த பொதுவுடைமையைக் கீழ்த்தரமாக விமர்சித்து எழுதிய பின்தொடரும் நிழலின் குரல் என்ற புத்தகம் - இவற்றை எழுதிய ஜெயமோகனுக்கு ரூபாய் இரண்டு லட்சம் கொடுத்து உதவியது தவறு என்பது என் கருத்து. தங்கள் கருத்து என்ன?"

* "இந்தியாவில் கம்யூனிச ஆட்சி ஏற்பட்டால் எப்படி இருக்கும்?"

* "தங்களுக்குப் பிடித்த கதையான குருபீடம் எழுத நேர்ந்ததன் பின்னணி என்ன?"

- உள்ளிட்ட பல கேள்விகளுக்கு ஜெயகாந்தனின் கூர்மையான நேர்படப் பேசும் பதில்கள்.


* நிகழ்வு: தமிழ்சேவைக்கு இயல்விருது - அ. முத்துலிங்கம்

* புதிதாய்ப் படிக்க - நூல் அறிமுகங்கள்

* கார்ட்டூன்

* தலையங்கம் - இடஒதுக்கீடு குறித்து பி.கே. சிவகுமார் எழுதிய விரிவான கட்டுரை

Tuesday, July 1, 2008

எனி இந்தியன் பதிப்பகத்தின் இரண்டு புதிய புத்தகங்கள்

மார்க்சியம்: ஒரு மீள்நோக்கு - ஏ.ஜே.பி. தைலர்; தமிழில்: மணிவேலுப்பிள்ளை.





மாத்தா ஹரி (புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை)- நாவல்.

தமிழ் ஓசையில் 'இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்'

22.06.08 தேதியிட்ட தமிழ் ஓசை நாளிதழில் அரவக்கோன் எழுதிய 'இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்' புத்தகத்தின் விமர்சனம் வெளிவந்துள்ளது.



நன்றி: தமிழ் ஓசை.

சண்டே இண்டியனில் 'துங்கபத்திரை' விமர்சனம்

மே 2008 (முதல் வாரம்) சண்டே இண்டியனில் வெளியான பாவண்ணனின் 'துங்கபத்திரை' புத்தக விமர்சனம்.

அமுத சுரபியில் 'வாஸந்தி கட்டுரைகள்' விமர்சனம்

அமுதசுரபி ஜூன் 2008 இதழில் அசோகமித்திரன் 'வாஸந்தி கட்டுரைகள்' புத்தகத்திற்கு விமர்சனம் எழுதியுள்ளார்.





நன்றி: அமுதசுரபி.

உயிர் எழுத்து இதழில் 'நதியின் கரையில்' புத்தக விமர்சனம்


மே 2008 உயிர் எழுத்து இதழில் வெளியான பாவண்ணனின் 'நதியின் கரையில்' புத்தக விமர்சனம்.

Saturday, May 3, 2008

'வார்த்தை' மாத இதழ் - மே 2008





ஹொகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்: நடிகர் சங்கக் கூச்சலும் சட்டத்தின் நடைமுறையும் - கே.எம். விஜயன்

நகரும் கண்டத்தில் தமிழை நகர்த்தும் தமிழர் - முருகபூபதி

பழைய பட்டணத்தின் மனிதக் குறிப்புகள் - கே. பாலமுருகன்

தமிழில் தேவாரம்: பின்தொடரும் நிழல்கள் - வெளி ரங்கராஜன்

ஆர்தர் சி. கிளார்க்: அறிவியல் புனைவும் முன்னோக்கிய பார்வையும் - துகாராம் கோபால்ராவ்

கட்டியங்காரன் - ஆர்தர் சி. கிளார்க் (தமிழில்: துகாராம் கோபால்ராவ்)

அரவக்கோனின் இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்: புத்தக விமர்சனம் - மோனிகா

கவிஞர் கல்பற்றா நாராயணன்: ஆளுமையும் கவிதைகளும் - ஜெயமோகன்

சுகுமாரன், தமிழச்சி தங்கபாண்டியன், வா. மணிகண்டன், பிரபாகரன் ஆகியோரின் கவிதைகள்

உயிர்சுழி - சுப்ரபாரதி மணியன்

வார்த்தை இதழ் வெளியீட்டுவிழா: குறிப்புகளும் புகைப்படங்களும் - ரா. பிரகாஷ்

வார்த்தை இதழை வெளியீட்டு ஜெயகாந்தன் ஆற்றிய உரை

எதைப் பற்றியும் அல்லது இதுமாதிரியும் தெரிகிறது - வ. ஸ்ரீனிவாசன்

யுகசந்தி - சுகா

குட்டப்பன் கார்னர் ஷோப் - இரா. முருகன்

நிழலின் குரல் - ஜெயந்தி சங்கர்

அமெரிக்கா என்றொரு அற்புதம் (ஒரு தேர்தல், ஒரு மதத்தலைவர், ஒரு திரைப்படம்) - கோபால் ராஜாராம்

ஏ.ஜே.பி. தைலர் எழுதிய மார்க்சியம் ஒரு மீள்நோக்கு - தமிழில்: மணி வேலுப்பிள்ளை

ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி

- இவற்றோடு

ஜெயகாந்தன் பதில்கள்
வாசகர் கடிதங்கள்
புதிதாய்ப் படிக்க
காலச்சுவடு நூறு
கார்ட்டூன்
வியனுலகு அனைத்தையும் அமுதென நுகர்வோம் - தலையங்கம்

Tuesday, April 29, 2008

கல்கியில் 'வார்த்தை' இதழ் வெளியீட்டு விழா குறித்த சிறுகுறிப்பு

27.04.2008 தேதியிட்ட கல்கி இதழில், 'வார்த்தை' இதழ் வெளியீட்டு விழா குறித்த சிறுகுறிப்பு வெளியாகியுள்ளது.

Monday, April 28, 2008

புதிய பார்வை இதழில் 'வார்த்தை' இதழ் வெளியீட்டு விழா குறித்த கவரேஜ்

ஏப்ரல் 15-30 புதிய பார்வை இதழில் 'வார்த்தை' இதழ் மற்றும் எனி இந்தியன் பதிப்பகத்தின் நான்கு புதிய புத்தகங்கள் வெளியீடு குறித்த கவரேஜ் வெளியாகியுள்ளது.










நன்றி: புதிய பார்வை.

Thursday, April 10, 2008

தினமணி இலக்கியச் சங்கமத்தில் எனி இந்தியன் புத்தகங்கள்

03.04.2008 தேதியிட்ட தினமணி இலக்கியச் சங்கத்தில் எனி இந்தியனின் 3 புத்தகங்கள் பற்றிய புத்தக அறிமுகம் வெளியாகியுள்ளது.



நன்றி: தினமணி

Friday, April 4, 2008

தினமலரில் 'பசுக்கள் பன்றிகள் போர்கள் சூனியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள்' புத்தகம் பற்றிய அறிமுகம்

23.03.08 தேதியிட்ட தினமலர் நாளிதழில் 'பசுக்கள் பன்றிகள் போர்கள் சூனியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள்' புத்தகம் பற்றிய சிறு மதிப்புரை ஒன்று வெளியாகியுள்ளது.




நன்றி: தினமலர்.

Sunday, March 30, 2008

தினமலர் புத்தக மதிப்புரையில் 'பிரதாப சந்திர விலாசம் - தமிழின் முதல் இசை நாடகம்.'

பிப்ரவரி 24-ம் தேதி வெளியான தினமலர் புத்தக மதிப்புரையில், ப.வ. இராமசாமி ராஜுவின் 'பிரதாப சந்திர விலாசம் - தமிழின் முதல் இசை நாடகம்' பற்றிய மதிப்புரை வெளியாகியுள்ளது.




புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://www.anyindian.com/product_info.php?products_id=104506

Thursday, March 27, 2008

எனிஇந்தியனின் வார்த்தை இதழ், நான்கு புதிய புத்தகங்கள் வெளியீடு - அழைப்பிதழ்

எனிஇந்தியனின் வார்த்தை இதழ், நான்கு புதிய புத்தகங்கள் வெளியீடு - அழைப்பிதழ்

அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்!


நாள்:
ஏப்ரல் 6, 2008 (ஞாயிறு) மாலை ஆறு மணி

இடம்:
தக்கர்பாபா வித்யாலயா,
58, வெங்கட் நாராயணா சாலை,
தி. நகர், சென்னை - 17.


வரவேற்புரை:
பி.கே. சிவகுமார்

அரவக்கோன் எழுதிய 'இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்' புத்தக வெளியீடு
வெளியிட்டு உரையாற்றுபவர்: இரா. முருகன்
பெற்றுக் கொள்பவர்: ஒளிப்பதிவாளர் செழியன்

பாவண்ணன் எழுதிய 'துங்கபத்திரை' புத்தக வெளியீடு
வெளியிடுபவர்: பாலசுப்ரமணியன்
பெற்றுக் கொண்டு உரையாற்றுபவர்: மணா

வெங்கட் சாமிநாதன் எழுதிய 'தமிழகக் கலைகளின் இன்றைய முகங்கள்' புத்தக வெளியீடு
வெளியிட்டு உரையாற்றுபவர்: கே.எஸ். சுப்ரமணியன்
பெற்றுக் கொள்பவர்: சுகா (சுரேஷ் கண்ணன்)

ந. முருகானந்தம் தொகுத்த 'அமெரிக்காவில் ஜெயகாந்தன்' புத்தக வெளியீடு
வெளியிட்டு உரையாற்றுபவர்: நாஞ்சில் நாடன்
பெற்றுக் கொள்பவர்: தொகுப்பாசிரியரின் தாயார் ஞானாம்பாள் நடராஜன்

வார்த்தை மாத இதழ் வெளியீடு
வெளியிட்டு உரையாற்றுபவர்: ஜெயகாந்தன்
பெற்றுக் கொள்பவர்: பி.ச. குப்புசாமி

நன்றியுரை:
ஹரன் பிரசன்னா

தொடர்புக்கு:
எனிஇந்தியன்.காம்
பதிப்பாளர் - புத்தக விற்பனையாளர்,
எண் 102, பி.எம்.ஜி. காம்ப்ளெக்ஸ்
57, தெற்கு உஸ்மான் சாலை,
தி. நகர்,
சென்னை - 600 017.
தொலைபேசி: (91)-44-24329283
மின்னஞ்சல்: customerservice [at] anyindian [dot] com

Thursday, February 14, 2008

தமிழச்சியின் வனப்பேச்சி நூல் வெளியீட்டு விழா வீடியோ

இணையத்தில் வழங்குவது: எனிஇந்தியன்.காம்

வீடியோ வலையேற்றம்: ஹரன் பிரசன்னா


விருந்தினர் அறிமுகம்
http://video.google.com/videoplay?docid=2451039480086093720

மனுஷ்யபுத்திரன் வரவேற்புரை
http://video.google.com/videoplay?docid=-1912590748598512961

நூல் வெளியீடு
http://video.google.com/videoplay?docid=2649000393696607894

பேராசிரியர் இந்திரா
http://video.google.com/videoplay?docid=-8559668363433690617

http://video.google.com/videoplay?docid=-7302693078615182064

சுகுமாரன்
http://video.google.com/videoplay?docid=7448925754057092619
http://video.google.com/videoplay?docid=6676707123203633093

முதல் பிரதி பெறுதல்
http://video.google.com/videoplay?docid=589808551659123729

ஜெயகாந்தன் பேச்சு
http://video.google.com/videoplay?docid=8587816048385139003&hl=en

ஜெயகாந்தன் பேச்சின் நிறைவுப்பகுதி
http://video.google.com/videoplay?docid=-8374024220778162850&hl=en

Tuesday, February 12, 2008

புதிய பார்வை இதழில் 'மெல்லக் கனவாய் பழங்கதையாய்..!' நாவல் பற்றிய விமர்சனம்

ஜனவரி 1-15 புதிய பார்வை இதழில், பா.விசாலம் எழுதிய 'மெல்லக் கனவாய் பழங்கதையாய்...!' நாவலின் புத்தக அறிமுகம் வெளியானது. அதை வாசிக்க கீழே உள்ள படத்தின் மீது சொடுக்கவும்.




மெல்லக் கதையாய் பழங்கனவாய் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க .
இங்கே
சொடுக்கவும்

Thursday, January 17, 2008

Chennai Book Fair 2008 - Day 14

இன்று கூட்டம் குறைவாக இருந்ததால் பதிப்பாளர்கள் பலர் ஏமாற்றம் அடைந்தனர் என்று நான் எழுதி எழுதி, அதைப் படித்து அலுப்பாக இருக்கிறது என்று நண்பரொருவர் சொன்னார். அதனால் மாற்றித் தொடங்குகிறேன். நேற்றே விற்பனை மேல் என்ற அளவில் இன்றைய விற்பனை இருந்தது.

கூட்டம் கூட்டமாகப் பலர் வந்தாலும் விற்பனை என்னவோ மந்தமே. கூட்டம்கூட மாலைக்குப் பின்னரே அதிகமாக இருந்தது. 'காணும்' பொங்கல் கொண்டாடிவிட்டு வந்ததால் புத்தகங்களைக் கண்டு கொண்டாடிவிட்டுச் சென்றனர் மக்கள் என்று ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்.

ஒன்பது மணி வாக்கில் ஒரு அன்பர் ஓடோடி வந்து 'பகவத் கீதையா ஒரு இடத்துல அடுக்கி வெச்சிருந்தாங்க, அங்க புத்தகங்களையே காணமே' என்று வருத்தப்பட்டார். அதைக் கேட்டுக்கொண்டிருந்த விரக்தி அடைந்த பதிப்பாளர் ஒருவரை மனம்தேற்றி அனுப்பிவைத்தேன்.


சில பதிப்பாளர்கள் அவர்களது கருத்துகளைக் கூறியிருக்கிறார்கள். அதை ஒலிக்கோப்பாக ஏற்றியிருக்கிறேன். அவசியம் கேட்கவும்.


இன்றோடு புத்தகத் திருவிழா இனிதே முடிவடைந்தது. சில குறைகள் இருந்தாலும் மொத்தத்தில் பிரம்மாண்டமான ஒரு புத்தகக் காட்சியை நடத்தி முடிப்பது பெரிய செயல்தான். அதற்காக பபாஸிக்கு என் பாராட்டுகள். புத்தகக் காட்சி சில துளிகள் என சில விஷயங்களை எழுத நினைத்திருக்கிறேன். நேரம் இருந்து, மூடும் இருந்தால் எழுதுவேன்.

தொடர்ந்து எல்லா நாள்களும் வந்து புகைப்படங்களைப் பார்த்துச் சென்ற அனைவருக்கும் எனி இந்தியன் சார்பாகவும் என் சார்பாகவும் நன்றி.

பதிவு: ஹரன் பிரசன்னா



சா.கந்தசாமி




அமைச்சர் வேலு





நல்லி குப்புசாமி செட்டியார்

மேலே உள்ள புகைப்படங்களைப் பயன்படுத்துவோர் எனி இந்தியனிடம் முன் அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும்.


akilan kaNNan.WAV

தமிழ்ப்புத்தகாலயம் அகிலன் கண்ணன்



Kalachuvadu kannan...

காலச்சுவடு கண்ணன்



kv_shailaja.WAV

வம்சி - கே.வி.சைலஜா



Manush.WAV

உயிர்மை மனுஷ்யபுத்திரன்



ravi tamilvanan.WA...

மணிமேகலைப் பிரசுரம் ரவி தமிழ்வாணன்




vaikarai.WAV

பொன்னி வெளியீட்டகம் (சாளரம் பதிப்பகம்) - வைகறை

Wednesday, January 16, 2008

Chennai Book Fair 2008 - Day 13

இன்றும் கூட்டம் குறைவாகவே இருந்தது. அதிகக் கூட்டம் வரும் என்று எதிர்பார்த்த பதிப்பாளர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். நாளையோடு புத்தகக் காட்சி முடிவடையும் நிலையில் முதல் ஞாயிறு அன்றும் கழிந்த சனி, ஞாயிறு அன்றும் நடந்த விற்பனை போல மற்ற நாள்கள் விற்பனை இல்லை. நிறைய விடுமுறை நாள்கள் இருந்தும் விற்பனை மந்தமே. இது குறித்து ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னார்கள். இடம் எளிதாக வரும் இடமாக இல்லாதது, பேருந்துகள் சரியாக இல்லாதது, ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கொஞ்சம் தூரம் நடக்கவேண்டியிருப்பது, சங்கமம் நிகழ்ச்சி என பல்வேறு காரணங்களைச் சொன்னார்கள். பபாஸி நிர்வாகம்,ஆறுவழிகளில் கூட்டம் செல்வதால் குறைவாக இருப்பதாகத் தோன்றுவதாகவும், உண்மையில் கூட்டம் அதிகமே என்று சொன்னதாகக் கேள்விப்பட்டேன்.

எப்படியிருந்தாலும் கழிந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு கூட்டம் குறைவு என்பதே என் அபிப்பிராயம்.

நாளை நிறைவுநாள். நாளை எப்படி கூட்டம் வரும், விற்பனை நடக்கும் என்று கணிக்கமுடியாது. குறைவாகவே இருக்கும் என்று பொதுவாகப் பேசிக்கொண்டார்கள் பதிப்பாளர்கள்.

பதிவு: ஹரன் பிரசன்னா


பத்து நிமிடத்தில் படம் வரையும் ஓவியர்




எழுத்தாளர் பவா செல்லத்துரை




பழ. நெடுமாறன்




கவிஞர் வைரமுத்து




வைரமுத்து கையெழுத்திடுகிறார்.




கோபல்ல கிராமம் நூலின் ஆங்கிலப் பதிப்பு வெளியீடு - தமிழினி அரங்கில்




எழுத்தாளர் மணா - பழ.நெடுமாறன்




வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்




எழுத்தாளர் வேதசகாயகுமார்




கி.ரா. - மொழிபெயர்ப்பாளர் சுப்ரமணியன்




புத்தக வெளியீடு


மேலே உள்ள புகைப்படங்களைப் பயன்படுத்துவோர் எனி இந்தியனிடம் முன் அனுமதி பெற்றுப் பயன்படுத்த வேண்டுகிறோம்.

Tuesday, January 15, 2008

Chennai Book Fair 2008 - Day 12

இன்று விற்பனையும் கூட்டமும் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்த்த பதிப்பாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர் என்றே சொல்லவேண்டும். காலையில் கூட்டம் மந்தமாக இருந்தது. மூன்று மணிக்குப் பின்னர் கூட்டம் வரத் தொடங்கியது. அப்போதும் விற்பனை என்னவோ மந்தமாகவே இருந்தது. இன்று வந்த கூட்டம் புத்தகக் காட்சியைச் சுற்றிப் பார்க்க வந்த கூட்டம் போலும். இன்றைக்கு அதிக விற்பனை கேண்டீனில்தான் இருந்திருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

சுஜாதா உயிர்மை அரங்கில் ரசிகர்களுக்குக் கையெழுத்திட்டார். சின்ன நிகழ்ச்சியாக வலைப்பதிவர் வா.மணிகண்டனின் கவிதைத் தொகுப்பான 'கண்ணாடிக்குள் அலையும் வெயில்' புத்தகத்தை சுஜாதா வெளியிட நடிகை ரோகினி பெற்றுக்கொண்டார். சுஜாதாவின் ரசிகர்கள் அவரிடம் வரிசையாகக் கையெழுத்துப் பெற்றார்கள். கடந்தமுறை கடும் கூட்டத்திற்கிடையில் சுஜாதா கையெழுத்திட்டார். இன்றைக்குக் கூட்டம் கொஞ்சம் குறைவாக இருந்ததால், அனைவரும் ஒருவர் பின் ஒருவராக அவரிடம் கையெழுத்துப் பெற்றார்கள். வா.மணிகண்டனுக்கு என் வாழ்த்துகள்.


பதிவு: ஹரன் பிரசன்னா



சாளரம் பதிப்பக அரங்கு




எழுத்தாளர், பத்திரிகையாளர் மணா




எழுத்தாளர் ராஜ சுந்தரராஜன்




எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன்




மக்கள் தொலைக்காட்சியில் கருத்துக் கேட்பு




சுஜாதாவிடம் மக்கள் தொலைக்காட்சி கருத்துக் கேட்பு, உடன் கவிஞர் மனுஷ்யபுத்திரன்




கையெழுத்திடும் சுஜாதா




மனுஷ்ய புத்திரன் - வா.மணிகண்டன் - சுஜாதா




சுஜாதா நூலை வெளியிட ரோகினி பெற்றுக்கொள்கிறார்




அன்னா கண்ணன்





இயக்குநர் பாலுமகேந்திரா - கவிஞர் பிரான்ஸிஸ் கிருபா




கவனத்தைக் கவர்ந்த தட்டியின் ஒரு பக்கம்




கவனத்தைக் கவர்ந்த தட்டியின் மறுபக்கம்



மேலே உள்ள புகைப்படங்களைப் பயன்படுத்துவோர் எனி இந்தியனிடம் முன் அனுமதி பெறுமாறு வேண்டுகிறோம்.