Monday, November 30, 2009

December 2009 'Vaarththai' Idhazhil...
சீனத்தராய் விடுவாரோ! - பி.கே. சிவகுமார்

வாசகர் கடிதங்கள்

ஏரியின் அமைதி - பாவண்ணன்

நேர் நீட்சி - உமா மகேஸ்வரி

காலனியத்தின் குழந்தைகள்: ஆங்கிலோ இந்திய சமூகம் - 3 - கோபால் ராஜாராம்

உலக ஊடகங்களிலிருந்து கார்ட்டூன்கள்

சுப்பையாவின் தம்பி - சுகா

மெலிஸாவின் தேர்வுகள் - ஜெயந்தி சங்கர்

அதிகாரத்தை எதிர்க்கும் உண்மை, கலையனுபவம் - ரா. கிரிதரன்

திரைப்படம்: செத்தமொழி பேசும் சித்திரம் - தார்விஸ்

தேவதேவன், நாஞ்சில் நாடன், நா.விச்வநாதன், ஹெச்.ஜி. ரசூல், தீபச்செல்வன், உயிரோடை லாவண்யா, நிலாரசிகன், பொன். வாசுதேவன், கணேசகுமாரன் கவிதைகள்

திரைப்படம்: பௌத்தமும் பௌத்தத்திற்கு எதிரான வடிவமும்: ஒரு மௌனப் போராட்டம் - கே. பாலமுருகன்

இரண்டாவது மரணம் - ஆனந்த் ராகவ்

பாவண்ணனின் துங்கபத்திரை கட்டுரைகள் (புத்தக விமர்சனம்) - வே. சபாநாயகம்

புதிதாய்ப் படிக்க: புதுக்கவிதையும் புதிய கவிதையும் - நிர்மலா

நிகழ்வு: மதுரா மாமனிதர் விருது - கலைமாமணி வி.கே.டி. பாலன்

நிகழ்வு: பொன்னி நெல்மணியும் பொன்னிறக் கோதுமையும் - சேதுபதி

பாகிஸ்தானில் மாறியிருக்கும் போர்நிலை - துக்காராம் கோபால்ராவ்

நெஃப்ர்டிடி - ரஜினி பெத்துராஜா

ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி

ஓவியங்கள்: ஜீவா

Tuesday, October 27, 2009

நவம்பர் 2009 'வார்த்தை' இதழில்...விரியுமறிவு நிலை காட்டுவீர்! வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்! - பி.கே. சிவகுமார்

வாசகர் கடிதங்கள்

எதிர்வினைகள்

என் ஓவியங்களில் இந்தியத்தன்மை தன்னிச்சையாக இடம் பெற்றது (ஆர்.பி. பாஸ்கரன் நேர்காணல்) - அம்ஷன்குமார்

ஒரு கஞ்சலுடன் உல்லாசப் பயணம் போதல் - பொ. கருணாகரமூர்த்தி

பாதங்கள் - கோகுலக்கண்ணன்

காலனியத்தின் குழந்தைகள்: ஆங்கிலோ இந்திய சமூகம் 2 - கோபால் ராஜாராம்

ஆகாசவாணி - எஸ்.வி. ராமகிருஷ்ணன்

ரேமண்ட் கார்வரின் வேதக் கோயில் - தமிழில்: எஸ். ஷங்கரநாராயணன்

காற்றில் கலந்த புதுக்கவிதை கவிஞர் பாலா (அஞ்சலி) - சேதுபதி

நாஞ்சில் நாடன், விக்ரமாதித்யன், நா. விச்வநாதன், சம்யுக்தா, ரமேஷ் கல்யாண் கவிதைகள்

உச்சிமாளி - சுகா

வெங்கட் சாமிநாதனின் யூமா வாசுகியிலிருந்து சமுத்திரம் வரை (புத்தக விமர்சனம்) - வே. சபாநாயகம்

பல்லவி அய்யரின் (தமிழாக்கம்: ராமன் ராஜா) சீனா விலகும் திரை (புத்தக அறிமுகம்) - மதுமிதா

பெட்டிக்காரன் - இரா. முருகன்

உலக ஊடகங்களிலிருந்து கார்ட்டூன்கள்

சாமானியனாக இல்லாத சாமானியன் (உன்னைப்போல் ஒருவன் விமர்சனம்) - கோபால் ராஜாராம்

ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள்

வரப்பெற்றோம்

புத்தக சிறுஅறிமுகங்கள்

ஓவியங்கள்: ஜீவா

Wednesday, September 30, 2009

அக்டோபர் 2009 'வார்த்தை' இதழில்...நோய்களற்ற உடலினாய் - பி.கே. சிவகுமார்

வாசகர் கடிதங்கள்

காணாமல் போனவனின் கடிதங்கள் - யுவன் சந்திரசேகர்

காலனியத்தின் குழந்தைகள்: ஆங்கிலோ இந்திய சமூகம் - 1 - கோபால் ராஜாராம்

அமெரிக்காவில் இந்தியர் - ஜவஹர சைதுல்லா (தமிழில்: ராமச்சந்திர ராவ்)

காணக்கிடைத்தவை: அமெடியஸ் திரைப்படம் - வ. ஸ்ரீநிவாசன்

ஒருநாள் ஒருபொழுது - நாகரத்தினம் கிருஷ்ணா

(அ)சைவம் - சுகா

நாஞ்சில் நாடன், தேவதேவன், உமா மகேஸ்வரி, நிர்மலா, நிலாரசிகன் கவிதைகள்

பாரதி மணியின் பல நேரங்களில் பல மனிதர்கள் (புத்தக விமர்சனம்) - பி.ச. குப்புசாமி

பசிபிக் தட்டுக்கடியில் அணைந்துவிட்ட ஒளிவிளக்குகள் - த. அரவிந்தன்

ஜெயமோகனின் அறிவியல் புனைகதைகள்: விசும்பு (புத்தக விமர்சனம்) - வே. சபாநாயகம்

புதிதாய்ப் படிக்க: கே.ஆர். மணியின் மெட்ரோ பட்டாம்பூச்சி - நிர்மலா

ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி

வரப்பெற்றோம் (புதிய புத்தகங்கள்)

ஓவியங்கள்: ஜீவா

Monday, August 31, 2009

செப்டம்பர் 2009 'வார்த்தை' இதழில்...நெஞ்சகத்தே பொய்யின்றி... - பி.கே. சிவகுமார்

வாசகர் கடிதங்கள்

வரவிருக்கும் தண்ணீர் யுத்தங்கள் - சாம் வாக்னின் (தமிழில்: பாரி பூபாலன்)

அவுஸ்திரேலியா என் அவுஸ்திரேலியா - நடேசன்

மின்மினிகளுக்கு நடுவில் - கோகுலக்கண்ணன்

அறிஞர் அண்ணா: திராவிட இயக்கத்தின் கோர்பசேவ் - 8 - கோபால் ராஜாராம்

அமெரிக்க முஸ்லிம்களுக்கு ஒரு கடிதம் - டாக்டர் முக்தேதார் கான் (தமிழில்: முகம்மது மீரான்)

கியூபா - 50 ஆண்டு - புரட்சியும் தொடரும் மக்களின் போராட்டமும் - துக்காராம் கோபால்ராவ்

பலூன் மழிப்பும் பக்கவிளைவுகளும் - வ.ஸ்ரீநிவாசன்

கவிதைகள் உடலின் மூலம் சொல்லப்பட்டாலும் உடலைக் கடந்தும் பேசுகின்றன - கமலாதாஸ் (தமிழில்: மதுமிதா)

தேவதேவன், நாஞ்சில் நாடன், கே. பாலமுருகன், சேரல், விஷ்வக்சேனன் கவிதைகள்

கால்கள் - கே.ஜே. அசோக்குமார்

அஞ்சல் அட்டை - இரா. ஆனந்தி

ஓர் வீட்டைப் பற்றிய உரையாடல் (புத்தக அறிமுகம்) - நிர்மலா

சந்திராவின் சிரிப்பு - சுகா

வெங்கட் சாமிநாதனின் இன்னும் சில ஆளுமைகள் (புத்தக விமர்சனம்) - வே. சபாநாயகம்

ஆட்சிப் பொறுப்பில் எலிகள்: வல்லிக்கண்ணன் கட்டுரைகள் (புத்தக அறிமுகம்) - நிர்மலா

புதிதாய்ப் படிக்க: புத்தக சிறு அறிமுகங்கள்

நல்லி திசையெட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள் விழா - நாகரத்தினம் கிருஷ்ணா

தமிழவன் படைப்புலகம்: கருத்தரங்கம் - சிவசு

ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி

ஓவியங்கள்: ஜீவா

Friday, July 31, 2009

ஆகஸ்ட் 2009 'வார்த்தை' இதழில்...களியுற்று நின்று கடவுளே இங்கு பழியற்று வாழ்ந்திடக் கண்பார்ப்பாய்! - பி.கே. சிவகுமார்

உலக ஊடகங்களில் இருந்து கார்ட்டூன்கள்

வாசகர் கடிதங்கள்

எதிர்வினை

வெள்ளம் - பாவண்ணன்

மைக்கேல் ஜாக்ஸன்: கருப்பின் வலி - துக்காராம் கோபால்ராவ்

பத்திரிகை சுதந்திரமும் அந்தரங்க உரிமையும் (அமைச்சர் ராஜா, ஜூனியர் விகடன் வழக்கை முன்வைத்து) - கே.எம். விஜயன்

விலக்கு - பா. கார்த்திகா

பொழுதுபோக்கும் ரஜினியும் - வ. ஸ்ரீநிவாசன்

கோடுகளோடு பேசுதல் - நா. விச்வநாதன்

திராவிட இயக்கத்தின் கோர்பசேவ் அண்ணா - 7: மதங்களும் அண்ணாவும் - கோபால் ராஜாராம்

வரப்பெற்றோம் - புத்தக சிறு அறிமுகங்கள்

அறிவொளி இயக்கத்தின் எழுச்சியும் எதிர்வினைகளும் - நாகரத்தினம் கிருஷ்ணா

இந்திரன், நாஞ்சில் நாடன், அ. பிரபாகரன், வெய்யில், ஆங்கரை பைரவி, எம். ரிஷான் ஷெரீப், பொ. செந்திலரசு, மனுபாரதி, நிலாரசிகன், நக்கீரன், விஷ்வக்சேனன், ”தொடரும்” சேதுபதி, கணேசகுமாரன் கவிதைகள்

கல்லும் கனவும் - இந்திரா பார்த்தசாரதி

பிரமநாயகத் தாத்தாவும் விஜயலலிதாவும் - சுகா

சுப்பையாவுடன் மிதக்கும் ஆங்கிலக் கனவுகள் - கே. பாலமுருகன்

நிகழ்வு: கனவு கவிதை நூல் வெளியீடு

ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி

ஓவியங்கள்: ஜீவா, ப்ரீதம்

Wednesday, July 1, 2009

ஜூலை 2009 'வார்த்தை' இதழில்...

தருமமே அரசியலதனிலும் பிற இயலனைத்திலும் வெற்றி தரும் - கோபால் ராஜாராம்

கார்ட்டூன்

புகைக்கண்ணர்களின் தேசம் - அ. முத்துலிங்கம்

நாஞ்சில் நாடன், தமிழவனுக்கு விருதுகள் - வார்த்தையின் வாழ்த்துகள்

திரும்பிப் பார்த்தலும் திரு அல்லிக்கேணியும் - வ.ஸ்ரீநிவாசன்

அறிஞர் அண்ணா: திராவிட இயக்கத்தின் கோர்பசேவ் ஆறாம் பகுதி - கோபால் ராஜாராம்

ஊமைக் கொலுசு - உமா மகேஸ்வரி

கர்நாடக சங்கீதம்: அழகியல் மாற்றங்கள் - இரா. கிரிதரன்

கயத்தாறு - சுகா

இலக்கிய உரையாடல்கள்: ஓர் அறிமுகம் (புத்தக விமர்சனம்) - வே. சபாநாயகம்

புதிதாய்ப் படிக்க: ஆ.சந்திரபோஸின் தமிழ் சினிமா: சில பார்வைகளும் சில பதிவுகளும் - நிர்மலா

தேவதேவன், நா.விச்வநாதன், நாஞ்சில் நாடன், மதுமிதா, சுப்ரபாரதி மணியன், த.அரவிந்தன் கவிதைகள்

எந்த நாள் காண்போம் இனி (மோதி ராஜகோபால் அஞ்சலி) - த. ஜெயகாந்தன்

எறிகதிர் நித்திலம் (மோதி ராஜகோபால் அஞ்சலி) - நாஞ்சில் நாடன்

காற்றின் பக்கங்களில் கவிதை (ராஜமார்த்தாண்டன் அஞ்சலி) - சிபிச்செல்வன்

தேடிக்கொண்டிருப்பவன் - கோகுலக்கண்ணன்

ஈரான்: வரலாறும் தற்போதைய நிகழ்வுகளும் - துக்காராம் கோபால்ராவ்

களைவதாம் நட்பு - சஞ்சீவி மனோகரன்

ஊஞ்சல் - சேதுபதி அருணாசலம்

ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச.குப்புசாமி

புத்தக சிறு அறிமுகங்கள் - மித்ரா

ஓவியங்கள்: ஜீவா

Monday, June 1, 2009

ஜூன் 2009 'வார்த்தை' இதழில்...
குடிமக்கள் சொன்னபடி, குடிவாழ்வு மேன்மையுற - பி.கே. சிவகுமார்

வாசகர் கடிதங்கள்

அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன்

விஷக்கோப்பை - யுவன் சந்திரசேகர்

அறிஞர் அண்ணா: திராவிட இயக்கத்தின் கோர்பசேவ் 5ஆம் பகுதி - கோபால் ராஜாராம்

நாராய் நாராய் செங்கால் நாராய் - நாகரத்தினம் கிருஷ்ணா

காதலின் ஊடாகப் பல்வழிப் பாதைகளின் பயணம் - ஒரியக் கவிஞர் ப்ரதிபா சத்பதி, தமிழில்: மதுமிதா

அசைவ உணவும் புற்றுநோயும்: தொடர்பின் அறிவியல் ஆராய்ச்சிகள் - டாக்டர் சாதனா அம்பலவாணன்

பாலாபிஷேகம் - சுகா

புதிதாய்ப் படிக்க: அய்யப்ப மாதவனின் நிசி அகவல் - நிர்மலா

புதிதாய்ப் படிக்க: மு.மேத்தா கவிதைகள் - மரபின் மைந்தன் முத்தையா

புதிதாய்ப் படிக்க: நீல பத்மநாபனின் பிறவிப் பெருங்கடல் - நிர்மலா

நாஞ்சில் நாடன், வைதீஸ்வரன், ஜெயானந்தன், வடகரை வேலன், பா.ராஜா, சுமதி இராமசுப்ரமணியம், மணிகண்ட பாண்டியன், சம்யுக்தா, கென், அம்சப்ரியா கவிதைகள்

புத்தக விமர்சனம்: பாரதிபாலன் கதைகள் - பாரதிபுத்திரன்

புத்தக விமர்சனம்: டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளையின் கால்டுவெல் ஐயர் சரிதம் - உதயணன்

மறைந்துபோன நாளைத் தேடி - குமார நந்தன்

பரிணாமவியல்: முன்னுரை,சில கேள்வி பதில்கள் - துக்காராம் கோபால்ராவ்

மாற்று எரிசக்தி மகாத்மியம் - நரேந்திரன்

தேநீரகம் - ஜெயந்தி சங்கர்

வரப்பெற்றோம் - புத்தக சிறுஅறிமுகங்கள்

ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி

ஓவியங்கள்: ஜீவா

Friday, May 1, 2009

மே 2009 'வார்த்தை' இதழில்...
பாருக்குள்ளே நல்ல நாடு! - பி.கே. சிவகுமார்

உலக ஊடகங்களிலிருந்து கார்ட்டூன்கள்

வாசகர் கடிதங்கள்

அன்பான சஹிருதயரே! (கேள்வி பதில்) - ஜெயகாந்தன்

திராவிட இயக்கத்தின் கோர்பசேவ் அறிஞர் அண்ணா 4: அண்ணா, நேதாஜி, கோல்வல்கர், ஹிட்லர் - கோபால் ராஜாராம்

பாட்டி வீட்டில் ஒரு கிணறு இருந்தது - கே. பாலமுருகன்

பன்பண்பாட்டுக் கொள்கையும் குழப்பமும் - அமர்த்தியா சென், தமிழில்: மணி வேலுப்பிள்ளை

வரப்பெற்றோம் - புத்தக சிறு அறிமுகங்கள்

ராஜாவின் குதிரைகள் - கோகுலக்கண்ணன்

எங்கள் காதலில் எழுத்தாளர் ஜெயகாந்தன் - மாதவராஜ்

ட்ரேடு - கே.ஜே. அசோக்குமார்

தேவதேவன், நா. விச்வநாதன், கோகுலன், ரமேஷ் கல்யாண், வே. முத்துக்குமார் கவிதைகள்

ஜேரட் டைமண்ட்: வரலாற்றின் ஓட்டத்தை புவியியல் நிர்ணயிக்கிறதா? - துக்காராம் கோபால்ராவ்

என்றென்றும் தாழ்மையுடன் - ரா. கிரிதரன்

புதிதாய்ப் படிக்க: ஆனந்த ரவிசாஸ்திரியின் சித்தர்களின் சமுதாயச் சிந்தனைகள் - மதுமிதா

ஜே. க்ருஷ்ணமூர்த்தி - வ. ஸ்ரீநிவாசன்

தகவல் - தமிழ்மகன்

விட்டுப்போன வார்த்தைகளும் எஞ்சியிருக்கும் நினைவுகளும் (சி. மணி, அப்பாஸ் அஞ்சலி கூட்டம்) - லதா ராமகிருஷ்ணன்

அஞ்சலி: அப்பாஸின் ரத்தம் பச்சையாயிருந்தது - அய்யப்ப மாதவன்

பாரி பூபாலனின் 'ஓவியத்தின் குறுக்கே கோடுகள்' (புத்தக விமர்சனம்) - வே. சபாநாயகம்

நாடகத் தமிழும் தமிழின் முதல் இசை நாடகமும் (பிரதாப சந்திர விலாசம் புத்தக விமர்சனம்) - பாரவி

புதிதாய்ப் படிக்க: பொன்மணியின் பாரதி என்றொரு ஞானக்குருவி - மதுமிதா

கார்கோ கல்ட் அறிவியல் - ரிச்சர்ட் ஃபெயின்மென் தமிழில்: துக்காராம் கோபால்ராவ்

இடம்பெயர்ந்த மனிதர்கள் (அரபு நாவலாசிரியர் எலியாஸ் கவுர், அறிமுகம்-நேர்காணல்) - எச். பீர்முஹம்மது

அஞ்சலி: சி. மணி - ஒரு நரகத்தில் பூத்த மலர் - வைதீஸ்வரன்

அஞ்சலி: சி. மணி - கி.அ. சச்சிதானந்தம்

ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி

ஓவியங்கள்: ஜீவா

Tuesday, March 31, 2009

ஏப்ரல் 2009 'வார்த்தை' இதழில்...
இன்று புதிதாய்ப் பிறந்தோம் - பி.கே. சிவகுமார்

கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ்

வாசகர் கடிதங்கள்

அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன்

நண்பன் - கமல்ஹாசன்

திராவிட இயக்கத்தின் கோர்பசேவ்: அறிஞர் அண்ணாவும் தமிழக வரலாறும் - கோபால் ராஜாராம்

கிணறு - ஆபிதீன்

இலங்கைக்கு ஆயுதம், இந்தியாவுக்கு நெருக்கடி: சீனாவின் ஏகாதிபத்திய அணுகல் - துக்காராம் கோபால்ராவ்

புதிதாய்ப் படிக்க: எஸ். சண்முகத்தின் கதைமொழி - மதுமிதா

பனாரஸ்: கிடை தப்பிய ஆட்டின் கதை: பர்லன் பியாமுத்து - நாகரத்தினம் கிருஷ்ணா

அஞ்சலி: கிருத்திகா, சுகந்தி சுப்ரமணியன் - மதுமிதா

சகர் - இரா. முருகன்

ஸெங் ஹெ-யின் பயணங்கள் - நரேந்திரன்

போதிமரம் - வசந்த தீபன்

வார்த்தை ஓராண்டு - அசோகமித்திரன், பாவண்ணன், உமா மகேஸ்வரி, இயக்குனர் பாலாஜி சக்திவேல், தேவதேவன், நாகரத்தினம் கிருஷ்ணா

நாகேஷுடன் ஒரு நாடகம் - வைதீஸ்வரன்

அனல் தினம் - உமா மகேஸ்வரி

கவிதைகள் - ஹெச்.ஜி. ரசூல், க. அம்சப்பிரியா, நிலாரசிகன், ச. முத்துவேல், தூரன் குணா, த. அரவிந்தன்

புதிதாய்ப் படிக்க: வ.ரா.வின் தமிழ்ப் பெரியார்கள், எஸ். புனிதவல்லியின் வெற்றிப்பாதையும் தன்னம்பிக்கையும் - மரபின் மைந்தன் முத்தையா

மண் - மலையாள மூலம்: ஸிதாரா எஸ், தமிழில்: ஷாராஜ்

பவா செல்லதுரையின் நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை (புத்தக விமர்சனம்) - த.எ. மாலதி

காணக்கிடைத்தவை: அசோகமித்திரனின் மானசரோவர் - வ. ஸ்ரீநிவாசன்

புதிதாய்ப் படிக்க: மீராவின் மீரா கட்டுரைகள், சேதுபதியின் கல்வியும் குழந்தைகளும் - நிர்மலா

ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி

ஓவியங்கள் - ஜீவா

Sunday, March 1, 2009

மார்ச் 2009 'வார்த்தை' இதழில்...
நெஞ்சு பொறுக்குதிலையே - பி.கே. சிவகுமார்

கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ்

தமிழ்நாட்டு வழக்குரைஞர்கள், வன்முறைகள், சில செய்திகள் (தொகுப்பு)

வாசகர் கடிதங்கள்

அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன்

திராவிட இயக்கத்தின் கோர்பசேவ்: அறிஞர் அண்ணாவும் தமிழக வரலாறும் (2ஆம் பகுதி) - கோபால் ராஜாராம்

உருவம் - கீரனூர் ஜாகிர்ராஜா

சங்ககாலப் பெண்கவிஞர்களின் அழகியல் நிலைகள் - வெளி ரங்கராஜன்

நான் கடவுள்: நரகத்திலிருந்து எழும் குரல்கள் - பாக்கியம் சங்கர்

இயற்கை எரிவாயு யுத்தம்: ஐரோப்பாவின் நெருக்கடி (ஐரோப்பாவில் நடப்பது என்ன?) - ஆர். கிரிதரன்

நேசனல் பொன்னையா - வா.மு. கோமு

மார்ட்டின் லூதர் கிங்: இந்தியாவுக்கு புனிதயாத்திரை - துக்காராம் கோபால்ராவ்

தேவதேவன், நிர்மலா, வெய்யில், ஆங்கரை பைரவி, வே. முத்துக்குமார், லஷ்மி சாகம்பரி கவிதைகள்

எதைப் பற்றியும் (அல்லது) இதுமாதிரியும் தெரிகிறது: இன்பமே வடிவு - வ. ஸ்ரீநிவாசன்

தகவல் அறியும் சட்டத்தில் நீதிபதியின் சொத்துக்கணக்கும் மந்திரிகளின் சொத்துக்கணக்கும் அறியலாமா? - கே.எம். விஜயன்

குட்டப்பன் கார்னர் ஷோப் - இரா. முருகன்

வாசனை - கோகுலக்கண்ணன்

குறும்புக்கார கண்ணன் - எஸ். ஜெயஸ்ரீ

திருநெல்வேலி - சுகா

மூடிக்கிடக்கும் வாசல்கள்: ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை (புத்தக விமர்சனம்) - எம். கோபாலகிருஷ்ணன்

பெண்ணியக்கத்தின் முன்னோடி: நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார் (புத்தக விமர்சனம்) - பாவண்ணன்

ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி

புதிதாய்ப் படிக்க: புத்தக அறிமுகங்கள்

ஓவியங்கள்: ஜீவா

Sunday, February 1, 2009

பிப்ரவரி 2009 'வார்த்தை' இதழில்...நன்றிது தேர்ந்திடல் வேண்டும்! - பி.கே. சிவகுமார்

வாசகர் கடிதங்கள்

அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன்

ஒரு முடிவுறாத நாவலின் பகுதிகள் - அசோகமித்திரன்

காஸாவில் தாக்குதல்: வரலாற்றுப் பின்னணி - துக்காராம் கோபால்ராவ்

சூன்யத்தில் நகரும் வீடு - கே. பாலமுருகன்

நிகழ்வு: அம்பைக்கு இயல் விருது - அ. முத்துலிங்கம்

திராவிட இயக்கத்தின் கோர்பசேவ்: அறிஞர் அண்ணாவும் தமிழக வரலாறும் - கோபால் ராஜாராம்

கலையின் கதை: உலகை மாற்றிய சில ஓவியங்கள் - கிரிதரன் ராஜகோபாலன்

அஞ்சலி: பன்மொழிப் புலவர் மு.கு. ஜகந்நாத ராஜா - மதுமிதா

அம்ச்சி மும்பை - நரேந்திரன்

விக்ரமாதித்யன், அ. பிரபாகரன், இலக்குமிகுமாரன் ஞானதிரவியம், த. அரவிந்தன், கென் கவிதைகள்

பல்லக்குப் பயணம் - வளவ. துரையன்

எதைப் பற்றியும் (அல்லது) இதுமாதிரியும் தெரிகிறது: ஒருதுளி கல்கத்தாவும் வேறு சிலவும் - வ. ஸ்ரீநிவாசன்

ஏகாந்த சஞ்சாரங்கள் - மலையாள மூலம்: எஸ். ஸிதாரா, தமிழில்: ஷாராஜ்

அரசியலமைப்புச் சட்டத்தில் தேவைப்படும் மாறுதல்கள் - கே.எம். விஜயன்

யாதுமாகி நின்ற பெண்மை (உமா மகேஸ்வரியின் ‘அரளிவனம்’- புத்தக விமர்சனம்) - பாவண்ணன்

தெரிந்த - கவனிக்கத் தவறிய முகங்கள் (பி.ச. குப்புசாமியின் ‘தெரிந்த முகங்கள்’ - புத்தக விமர்சனம்) வே. சபாநாயகம்

குட்டப்பன் கார்னர் ஷோப் - இரா. முருகன்

நிகழ்வு: விளக்கு பரிசளிப்பு விழா - வெளி ரங்கராஜன்

இரவு பகல் என்ற இடைவெளியில்: அரபு நாவலாசிரியர் அப்துல் ரஹ்மான் அல் முனீப் ஓர் அறிமுகம் மற்றும் நேர்காணல் - எச். பீர்முஹம்மது

சின்னப் பையன் - சுகா

ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி

ஓவியங்கள்: ஜீவா

Friday, January 9, 2009

CHENNAI BOOK FAIR 2009

Chennai Book Fair 2009 - Day 1
http://pksivakumar.blogspot.com/2009/01/8-2008.html

Chennai Book Fair 2009 - Day 2
http://pksivakumar.blogspot.com/2009/01/9-2009.html

எனி இந்தியன் பதிப்பகத்தின் நான்கு புதிய புத்தகங்கள்

ஜெயமோகனின் ஈழ இலக்கியம்
ஒரு விமர்சனப் பார்வை

கோபால் ராஜாராம் பதிப்புரையிலிருந்து:

“ஈழ இலக்கியம், கரிசல் இலக்கியம் என்று வாழ்புலம் சார்ந்த வரையறையின் மூலம் நம் பகுப்பு எதைக் குறித்தானது? வாழ்புலத்தின் புறஅடையாளங்கள் இலக்கியத்திற்கு யதார்த்தப் பின்னணியை அளிக்கலாம். வாழ்க்கை முறையையும், புலம் சார்ந்த வாழ்க்கைப் பிரச்சினைகளையும் எழுதிச் செல்லலாம். ஆனால் அந்தப் புற அடையாளம் மட்டுமே இலக்கியச் சிறப்பை அளிப்பதில்லை. உடை, உணவு, பழக்க வழக்கங்களைச் சார்ந்திருப்பதைத் தாண்டி, வாழ்புலத்தின் அக அடையாளத்தைச் சுட்டும்வகையில் எழும் எழுத்துதான் இலக்கியம் ஆகிறது. ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைமுறையின் நடைச்சித்திரத்துக்கு அப்பால், நிரந்தர மதிப்பீடுகளை விசாரணை செய்ய வாழ்புலத்தின் புற அடையாளங்களைப் பயன்படுத்திக்கொண்டு, அதே நேரத்தில் அதைக் கடந்து செல்வதுதான் நல்ல இலக்கியத்தின் குணாம்சம். அதனால் ஈழ இலக்கியத்தைப் பற்றிய இந்தப் புத்தகத்தில் ஜெயமோகன் ஸ்ரீலங்கா தமிழர்களின் வாழ்க்கைப் பதிவுகளை எந்த இலக்கியவாதி கவனமாய்ப் பதிவு செய்திருக்கிறார் என்று பட்டியலிடவில்லை. அதற்குப் பதிலாக, காத்திரமான இலக்கியத்தைப் படைத்தளித்த இலக்கியவாதிகளை இனம் காட்டி ஏன் இவர்கள் பொருட்படுத்தி,பொக்கிஷமாய்ப் போற்றப்படவேண்டியவர்கள் என்று விரிவாகவும், ஆழமாகவும் பேசுகிறார். தேர்வுகளுக்குக் காரணம் காட்டுவது போன்றே நிராகரிப்புக்கும் காரணம் காட்டத் தவறவில்லை.”

ஜெயமோகனின் முன்னுரையிலிருந்து:

”ஈழ இலக்கியம் குறித்து எனக்கு எப்போதுமே எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் இருந்துள்ளது. இரண்டையும் தொடர்ந்து பதிவு செய்து வந்திருக்கிறேன். எதிர்பார்ப்புக்கான காரணங்கள் பல. தமிழ்நாட்டை ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஈழம் பலமடங்கு கல்வி வசதியும், பொருளியல் வசதியும் கொண்டதாகவே முன்பு இருந்திருக்கிறது. சராசரித் தமிழர்களைவிட அறிவுக்கூர்மையும் தீவிரமும் கொண்டவர்களாகவே ஈழத்தமிழர் தங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மேலும் ஈழ இலக்கியத்தின் தொடக்கம் தமிழ்நாட்டைவிட காலத்தால் முந்தையது. தமிழ்நாட்டைவிடவும் தீவிரமானது.

ஆனால் அந்த எதிர்பார்ப்புகளை எனக்கு ஈழ இலக்கியத்தில் நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை. அதைப் பதிவு செய்தமையால் நான் பழிக்கப்பட்டிருக்கிறேன். என்றாலும் அது என்னுடைய மனப்பதிவு மட்டுமல்ல, தொடர்ந்து வலுப்பெறும் விமரிசனக் கருத்தும்கூட. தொடர்ந்து சந்திக்க நேர்ந்த வரலாற்றுச் சவால்களைப் படைப்புத்தளத்தில் ஈழத்தவர் சந்திக்கவில்லை. அவ்வனுபவத்தின் தீவிரங்கள் இலக்கியத்தில் வெளிப்பட்டது மிகமிகக் குறைவேயாகும்.

அதற்கான காரணங்கள் பல. வரலாற்றுக் காரணங்கள், பண்பாட்டுக் காரணங்கள். ஆனால் இலக்கியப் படைப்புகளை வைத்துப் பார்க்கும்போது ஆழ்ந்த, அந்தரங்க அனுபவங்களுக்குள் செல்லாமல் புறவயமான கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மட்டுமே நம்பி இலக்கியம் படைக்கும் ஒரு போக்கு அங்கு வலுவாக இருந்ததே முக்கிய காரணம் என்று எனக்குப் படுகிறது. படைப்பூக்கம் கொண்ட எழுத்துக்கள் அந்தக் கோட் பாட்டுப் பெருமுரசின் ஒலியில் மறைந்தும் போயின. இன்றும்கூட அங்கு அந்நிலையே நிலவுகிறது.”

மு. தளையசிங்கம், கா. சிவத்தம்பி, எஸ். பொன்னுத்துரை, அ. முத்துலிங்கம், வில்வரத்தினம், சேரன் ஆகியோரின் படைப்புகள் குறித்த ஜெயமோகனின் திறனாய்வு நூலில் இடம்பெற்றுள்ளது.உமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்)உமா மகேஸ்வரி பற்றி:
1971ல் பிறந்த உமா மகேஸ்வரி 1985லிருந்து எழுதி வருகிறார். கவிதைகளில் தொடங்கி சிறுகதைகள், நாவல் என்று விரிவாகப் பயணம் செய்பவர். எம்.ஏ. ஆங்கில இலக்கியம் பயின்றவர். நட்சத்திரங்களின் நடுவே (1990), வெறும் பொழுது (2002), கற்பாவை(2004) ஆகிய கவிதைத் தொகுதிகளும், மரப்பாச்சி (2002), தொலைகடல் (2004) ஆகிய சிறுகதைத் தொகுதிகளும், யாரும் யாருடனும் இல்லை (2003) என்ற நாவலும் வெளியாகியுள்ளன. கதா விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, இந்தியா டுடேயின் சிகரம் விருது, ஏலாதி, இலக்கிய சிந்தனை, கவிஞர் சிற்பி இலக்கியப் பரிசுகள் பெற்றவர். ஆண்டிப்பட்டியில் வசிக்கிறார்.

கோபால் ராஜாராம் பதிப்புரையிலிருந்து:

”உமா மகேஸ்வரியின் கதைகளில் அழகியல் இயல்பாக வெளிப்படுவது இங்கே விசேஷமாய்க் குறிப்பிடத்தக்கது. அழகியலுக்கு எதிரான ஒரு பொதுக்கருத்தை தமிழ் இலக்கியச் சூழல் முன்வைத்து, இலக்கிய நுண் உணர்வினை அரசியலுக்குப் பலி கொடுத்துவிட்ட சூழலில் அர்த்தமுள்ள மறுப்பாக உமா மகேஸ்வரியின் அழகியல் மலர்ந்திருக்கிறது. வலிந்து ஏற்றப்படாத மலர்ச்சி அது. மணற்கன்னியும், ஏகாந்த மரமும் இந்த அழகியலின் எழிலையும் - கன்னி, ஏகாந்தம் என - சோகத்தையும் ஒருசேர மலர்விக்கின்றன. மற்ற கதைகளின் போக்கிற்கு உமா மகேஸ்வரியின் அழகியல் பார்வை இயல்பான வலிமையை அளிக்கிறது.

முன் உதாரணம் இல்லாத தனித்த பார்வையும், தனித்த பாணியும் கொண்ட இந்தக் கதைகளின் தொகுப்பை வெளியிடுவதில் எனி இந்தியன் பதிப்பகம் பெருமை கொள்கிறது.”

உமா மகேஸ்வரியின் என்னுரையிலிருந்து:

”இந்தக் கதைகளைப் படிக்கும்போது நான் எழுதாமல் விட்ட கதைகள் என்னைச் சூழ்ந்து சுழல்கின்றன. எப்போதும் ஏதாவது ஒரு கதையுடன் இருப்பது எவ்வளவு ஆசுவாசமானது!”

பதினான்கு சிறுகதைகள் புத்தகத்தில் உள்ளன.பி.ச. குப்புசாமியின் தெரிந்த முகங்கள்பி.ச. குப்புசாமி பற்றி:
வேலூர் (வடாற்காடு) மாவட்டம் திருப்பத்தூரைச் சார்ந்தவர் பி.ச. குப்புசாமி. 35 ஆண்டுகளுக்கும் மேலாக குக்கிராமங்களில் ஆரம்பப்பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழிலக்கியத்தில் - குறிப்பாக பக்தி இலக்கியத்தில் -ஆழ்ந்த ரசனையும் தேர்ச்சியும் கொண்டவர். மரபுக் கவிஞர். சந்திரமௌலி, குயிலி ஆகிய பெயர்களில் அறுபதுகளில் தமிழில் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதினார். எழுத்தின் மீதுள்ள மதிப்பினாலேயே எழுதுவதைக் குறைத்துக்கொண்டவர். 48 ஆண்டுகளாக ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பர். ஜெயகாந்தனை நன்கறிந்த நால்வரில் ஒருவராக அடையாளம் காணப்படுபவர். இவரது கங்கவரம் சிறுகதை விட்டல்ராவால் 20ஆம் நூற்றாண்டின் சிறந்த கதைகளுள் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டது. மனைவி சரஸ்வதி ஓய்வுபெற்ற ஆரம்பப்பள்ளி ஆசிரியை. ஒரு மகனும் மகளும் உண்டு.

கோபால் ராஜாராமின் பதிப்புரையிலிருந்து:
"இந்த இலட்சியவாதம் இந்த மனிதர்களைச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திவிடவில்லை. மாறாக சமூகத்தின் எளிமையான வாழ்நிலைக்குள்ளிருந்தே வெளிப்படுகிறது. மௌன உறவை வெளிப்படுத்தும் கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. பரஸ்பரம் தவறாக இல்லாத உணர்வுகளைக் கூட வெளிப்படுத்திக்கொள்ள முடியாதபடி தயக்கமும், சமூக உணர்வின் தாக்கமும், பரஸ்பர மரியாதையும் ‘கங்கவர'த்தின் நாயகன் சாரங்கனை, அவன் மிக மதிக்கிற, அனுதாபம் கொள்கிற பெண்ணுடன் ஒரு வாக்கியத்துக்கு மேல் பேச முடியாமல் செய்கிறது. காலங்காலமாய்க்காதல் கொள்ளும் பெண் தன் உணர்வுகளை வெளிப்படுத்த காதலனின் மரணப்படுக்கை வரையில் காத்திருக்கிறாள்.

‘உரமேறி மரத்துப் போகாதவனாய், வாழ்க்கையையும் அதன் ஒவ்வோர் அம்சத்தையும் மிகவும் அபூர்வமானதாய்க் கருதிக் கரைந்து போகிறவனாய்'இருந்த சாரங்கனைப் போலவே பல மனிதர்கள் இந்தக் கதைகளில் வலம் வருகிறார்கள்.

தெரிந்த முகங்கள்தான். ஆனால் நாம் கவனிக்கத் தவறிய முகங்கள் அவை.

மென்மையும் மேன்மையும் கொண்ட மனிதர்கள் இந்தக் கதைகளில் உலவுகிறார்கள். தனக்குப் பிடிக்காத ஒருவனைக் கணவனாய் ஏற்றுக் கொள்ள மறுத்துவிடுவேன் என்று உறுதியாய்ச் சொல்லும் சிறுமியிடமும் இந்த மென்மையும் மேன்மையும் வெளிப்படக் காணலாம்.”

ஜெயகாந்தனின் அணிந்துரையிலிருந்து:
புத்தகத்திலுள்ள ஒவ்வொரு கதையைப் பற்றியும் விரிவாகப் பேசுகிற ஜெயகாந்தன் பின்வருமாறு அணிந்துரையை நிறைவு செய்கிறார்.

”நண்பர் பி.ச. குப்புசாமியிடம் எனக்கு ரொம்ப பிடித்த குணம் இந்த Unassuming nature தான். இப்போது He assumes and proves that he is a perfect Talented writer! இந்தத் தொகுப்பின் மூலம் தான் ஒரு திறமையுள்ள முழுமையான எழுத்தாளர் என்பதை நிரூபிக்கிறார்.

மகிழம்பூ காலம் கடந்த பிறகுதான் மணக்கும். நண்பர் பி.ச.கு. மகிழம்பூ ஜாதி!”

பி.ச. குப்புசாமியின் 9 சிறுகதைகள் நூலில் உள்ளன.நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார்நாகரத்தினம் கிருஷ்ணா பற்றி:
நாகரத்தினம் கிருஷ்ணா பிறந்தது புதுச்சேரிக்கு அருகில் விழுப்புரம் (தமிழ்நாடு) மாவட்டத்தைச் சேர்ந்த கொழுவாரி என்ற சிறு கிராமம். கல்வி, வருவாய்த்துறையில் பணி, திருமணமென இந்திய வாழ்க்கையின் பெரும்பகுதி புதுச்சேரிக்குச் சொந்தமானது. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பிரான்ஸில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரமான ஸ்ற்றாஸ்பூர் (Strasbourg) என்ற நகரில் வசித்துவருகிறார். சமூகவியலில் (Sociology) முதுகலைப்பட்டம், பிரெஞ்சு-ஆங்கிலம் மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. தொழில் வாணிபம், பகுதி நேரமொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார். பிரெஞ்சு இலக்கியத்தில் ஆர்வம். இணையம், சிற்றிதழ்களில் எழுதிவருபவர். முதல் நாவல் நீலக்கடல் தமிழக அரசின் பரிசினைப் பெற்றிருக்கிறது. சமீபத்தில் வெளிவந்துள்ள எனி இந்தியன் பதிப்பகத்தின் மாத்தாஹரி நாவலும் விமர்சகர்களிடத்தில் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. இதுவரை இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், இரண்டு பிரெஞ்சு மொழிபெயர்ப்பு நாவல்கள், பிரெஞ்சு சிறுகதைகள் மொழிபெயர்ப்புத் தொகுப்பொன்று, பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன் என்ற பெயரில் கட்டுரைத் தொகுப்பொன்று வெளிவந்துள்ளன.

கோபால் ராஜாராம் பதிப்புரையிலிருந்து:
”பிரெஞ்சு மொழியை நன்றாக அறிந்த நாகரத்தினம் கிருஷ்ணா ஆழமாய் சிமொன் தெ பொவ்வாரைப் பயின்றது மட்டுமல்லாமல் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை, அவர் ஆய்வு மேற்கொண்ட துறைகளான வரலாறு, தத்துவம், நடைமுறை எல்லாவற்றையும் நுணுக்கமாக அணுகியுள்ளார். அவருடைய பெண்விடுதலைக் கருத்துகளை ஒப்புக்கொண்டு அவற்றின் அடியாழத்திற்குச் சென்றுள்ளார். மிகத் தெளிவான மொழியில், தமிழருக்கு மிக அருகாமையில் சிமொன் தெ பொவ்வாரைக் கொண்டுவந்துள்ளார்.ஓர் அறிவுஜீவியின் வரலாறு எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கு இந்த நூல் ஓர் உதாரணமாய் இருக்கிறது என்றால் மிகையில்லை.”

நாகரத்தினம் கிருஷ்ணாவின் முன்னுரையிலிருந்து:
”பள்ளி வயதில் எதிர்காலத் திட்டம் குறித்து எழுதப்பட்ட வியாசங்களில் புகழ்பெற்ற எழுத்தாளராக வரவேண்டுமென்ற கனவினை வெளிப்படுத்தி பிற்காலத்தில் அதனை நனவாக்கியவர் எவருமுண்டா என்று கேட்கும்பட்சத்தில் சட்டென்று சுட்டக்கூடிய ஒரு பெயர் சிமொன் - புதிரான பெண்மணி. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த பிரெஞ்சு இலக்கிய உலகின் மூத்த படைப்பாளி, தத்துவவாதி, பெண்விடுதலையை வலியுறுத்தியவர். இரண்டாம் உலகப்போருக்குப்பின் பெண்ணுரிமைக்கான தத்துவார்த்த சிந்தனைகளை அறிவுஜீவிகளுக்கு மட்டுமின்றி வெகுசனப்பார்வைக்கும் கொண்டு சென்றிருக்கிறார். பிற்காலத்தில் அவரை முன்மாதிரியாகக்கொண்டு பெண்ணியல்வாதிகள் உலகமெங்கும் நம்பிக்கையுடனும், உயிர்ப்புடனும் இயங்கினார்கள். சிறந்த நாவலாசிரியர், கட்டுரையாளர், விமர்சகர். ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் அதாவது பெண்விடுதலை சிந்தனைகள் புதிய தளத்தில் விவாதிக்கப்படுவதற்கு முன்பாக சிமொன் தெ பொவ்வாருடைய ‘இரண்டாமினம்' என்ற நூலே, பெண்விடுதலையில் அக்கறைகொண்ட புதுமைப்பெண்களுக்கிடையே சங்கேதமாகப் பயன்பட்டு அவர்களை ஓரணியில் திரட்டியது என்பதையும் இங்கே எழுதியாகவேண்டும்.

அரசியலாகட்டும், இலக்கியமாகட்டும், பிரான்சு நாட்டைப் பொருத்தவரை சிமொனை மையப்படுத்தியே அவர் காலத்திய நிகழ்வுகள் முன்நகர்ந்தன.”

சிமொன் தெ பொவ்வார் - ஒரு திமிர்ந்த ஞானச்செருக்கு, சிமொன் தெ பொவ்வார் - லான் போல் சார்த்ரு, சிமொன் தெ பொவ்வார் - நெல்ஸன் அல்கிரென், இரண்டாமினம் - ஒரு பார்வை, இரண்டாமினம் முதல் பாகம் - விதி, பொருள்முதல்வாதமும் பெண்களும், பெண்களும் வரலாறும், பழங்கதைகளும் பெண்களும், இரண்டாமினம் - இரண்டாம் பாகம், சூழ்நிலையும் பெண்களும், இரண்டாமினம் நூலுக்கு சிமொன் தெ பொவ்வார் எழுதிய முன்னுரை, சிமொன் தெ பொவ்வார் - நேர்காணல், சிமொன் வாழ்க்கைக் குறிப்புகள், சிமொன் படைப்புகளின் பட்டியல் ஆகிய அத்தியாயங்கள் புத்தகத்தில் உள்ளன.