முதல் அரங்கில் இருந்த சாப்பாட்டுக் கடையை தனியாக பின்பக்கம் மாற்றிவிட்டார்கள்.
வண்டி பார்க்கிங் ஏரியாவில் நேற்று வரை கும்மிருட்டு இருந்தது. இன்று பளபளவென மஞ்சள் பல்புகளில் ஒளிவெள்ளத்தைக் காணமுடிந்தது.
உள்நுழைவு வாயிலுக்கருகில் உள்ள மரங்களில் பச்சை வண்ண சீரியல் செட் லைட்டுகளை கட்டித் தொங்கவிட்டிருக்கிறார்கள். மொத்தத்தில் இன்றுதான் புத்தகக் கண்காட்சி தொடங்கியது போன்ற எண்ணம் ஏற்பட்டது.
இன்று கிரெடிட் கார்டு வசதியும் செய்துகொடுத்துவிட்டார்கள்.
இன்று காலை மாணவர்கள் பங்குகொள்ளும் ஓவியப் போட்டி நடைபெற்றது.
மதியம் குமுதம் அரங்கில் ஆஹா எஃப் எம்மின் நேரடி நிகழ்ச்சி ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஒலிபரப்பானது.
இன்று மாலை 4 மணிக்கு புத்தக கண்காட்சி அரங்கில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் 12 நூல்கள் வெளியீட்டுவிழா நடைபெற்றது. தோழர் நல்லகண்ணுவும் தோழர் ராஜாவும் பங்குகொண்டார்கள்.
மாலையில் என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதாவைப் பற்றிய குறும்படங்கள் ஒளிபரப்படும் என்று அறிவிப்பு வெளியானது. அதை நான் பார்க்க இயலாததால், அதுபற்றிய மேலதிக விவரங்கள் தெரியவில்லை.
நாளை காலை 8.30 மணிக்கு பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற இருக்கிறது.
6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்குத் தலைப்பு: நான் அறிந்த தலைவர்கள்
9 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்குத் தலைப்பு: மாணவர்களும் நூலகங்களும்
11 மற்றும் 12ம் வகுக்கு மாணவர்களுக்குத் தலைப்பு: உலக மாற்றத்தில் மாணவர்கள். விருப்பப்பட்டவர்கள் சென்று பேசவும்.
பதிவு: ஹரன்பிரசன்னா





நர்மதா பதிப்பகம்

நர்மதா பதிப்பகம்


எல்.கே.எம். பப்ளிகேஷன்ஸ்

பாரதி புத்தகாலயம்

பாரதி புத்தகாலயம்

பாரதி புத்தகாலயம்

பாரதி புத்தகாலயம்

பாரதி புத்தகாலயம்

காலச்சுவடு பதிப்பகம்

காலச்சுவடு பதிப்பகம்

காலச்சுவடு பதிப்பகம்

பிரதீப் எண்டர்பிரைசஸ்

நவீன வேளாண்மை

அம்ருதா

கே.கே. புக்ஸ்

கே.கே.புக்ஸ்

கே.கே.புக்ஸ்


சாகித்ய அகாடமி

சாகித்ய அகாடமி

எனி இந்தியன் பதிப்பகம்

அறிவாலயம்

குமுதம் பப்ளிகேஷன்ஸ்

வாசகக் கூட்டத்தின் ஒரு பகுதி

வாசகக்கூட்டத்தின் ஒரு பகுதி

ஆஹா எஃப்.எம்.இன் நேரடி ஒலிபரப்பு

தேசிகன்

வாசகக் கூட்டத்தின் ஒரு பகுதி

வாசகக்கூட்டத்தின் ஒரு பகுதி

எனி இந்தியன் பதிப்பகம்

கிருபா - ரஜினி ராம்கி

நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் புதிய புத்தகங்கள் வெளியீட்டு மேடை

தூர்தர்ஷன்

நிழல் திருநாவுக்கரசு - கவிஞர் தேவதேவன்

திருமகள் நிலையம்

இகாரஸ் பிரகாஷ்
மேற்கண்ட புகைப்படங்களைப் பயன்படுத்த விரும்புவோர் எனி இந்தியனிடம் முன் அனுமதி பெற வேண்டுகிறோம்.