Saturday, January 5, 2008

Chennai Book Fair - 2008 - Day 02

இரண்டாம் நாள் ஆரம்பத்தில், முதல் நாள் பெய்த மழையின் ஹேங்க் ஓவரால் கூட்டம் கொஞ்சம் குறைவாக இருந்தது. நேரம் செல்லச் செல்ல சூடுபிடிக்கத் தொடங்கியது. மதியத்திற்குப் பின் நல்ல கூட்டம் வந்தது என்றே சொல்லவேண்டும்.

இன்னும் உள்கட்டமைப்பு பணிகள் முழுமைபெறவில்லை. இன்று இரவோடு முழுமை அடையலாம். கேண்டீனை முதல் அரங்கிற்கு முன்னாலேயே வைத்திருக்கிறார்கள். இதனால் கூட்டம் அந்த வரிசைக்கு, அதிலும் குறிப்பாக முதலிரண்டு அரங்குகளுக்கு வருவது தடைபடுகிறது என்று பேசியது காதில் விழுந்தது.

கிரெடிட் கார்டு மெஷின்களுக்கான வயரிங் வேலை இன்றுதான் முடிந்தது. நாளைமுதல் கிரெடிட் கார்டு பயன்படுத்தி புத்தகம் வாங்கமுடியலாம். நிறையபேர் இன்று கிரெடிட் கார்டில்லாமல் அதிருப்தி அடைந்துகொண்டார்கள்.

மழையின் காரணமாக குறும்பட, ஆவணப் பட நிகழ்வுகள் இன்று ரத்து செய்யப்பட்டு நாளைக்கு மாற்றப்பட்டது. கு.ஞானசம்பந்தனின் பட்டிமன்றம் நடைபெறும் என்று அறிவித்தார்கள். எனக்கு பட்டிமன்றத்தைப் பார்க்க நேரம் கிடைக்கவில்லை.

-பதிவு: ஹரன்பிரசன்னா

நாளை இன்னும் கூட்டம் வரும் என்று பதிப்பாளர்கள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.


எனி இந்தியன் பதிப்பகம்



எனி இந்தியன் பதிப்பகம்



எனி இந்தியன் பதிப்பகம்



எனி இந்தியன் பதிப்பகம்



எனி இந்தியன் பதிப்பகம்



முதல் அரங்கிற்கு முன் இருக்கும் சாப்பாட்டுக் கடை



இன்று திடீரென முளைத்திருக்கும் மசாலா வகையறா கடை, இதுவும் முதல் அரங்கிற்கு முன்.



யோகொதா சாய் சங்கம்



யோகொதா சாய் சங்கம்



ஆனந்தவிகடன்



ஆனந்த விகடன்



வம்சி வெளியீடு



விஜயா பதிப்பகம்



பத்ரி - பா.ராகவன்



ஆழி பதிப்பகம்



நேஷனல் புக் ட்ரஸ்ட்



விடியல் பதிப்பகம்




சுகா - ஒளிப்பதிவாளர் செழியன்



கவிஞர் விவேகன்


மேலே இருக்கும் புகைப்படங்களைப் பயன்படுத்துவோர் எனி இந்தியனிடம் அனுமதி பெற்றுப் பயன்படுத்த வேண்டுகிறோம்.