Wednesday, January 9, 2008

Chennai Book Fair 2008 - Day 06

இன்றும் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. சில கடைகளில் சுமாரான விற்பனையும் சில கடைகளில் மந்தமான விற்பனையும் இருந்தன.

நிறைய பள்ளிக்கூட பையன்களுக்கு இலவச பாஸ் கொடுத்திருந்தார்கள். எங்கும் ஒரே சிறுவர்கள் கூட்டம். நிறைய சிறுவர்கள் 'அங்கிள் ஒரு நோட்டிஸ் எடுத்துக்கலாமா' என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். சில பதிப்பாளர்கள் சிறுவர்களின் தொல்லை தாங்காமல் பபாஸி அலுவலகத்தில் புகார் செய்தார்கள். பையன்களும் தங்கள் பங்குக்கு தங்கள் நண்பனைக் காணவில்லை என்று ஆளாளுக்கு பபாஸியில் புகார் செய்ய, ஒருகட்டத்தில், 'எல்லா கட்டம் போட்ட சட்டை போட்ட பையன்களையும் வெளிய அனுப்புங்கப்பா' என்ற அறிவிப்பெல்லாம் வெளியாக, ஜாலியாக இருந்தது!


புத்தகக் காட்சி அரங்க மேடையில் மக்கள் தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்கள் கலை நிகழ்ச்சி நடத்தினார்கள்.

எஸ்ரா, திலீப்குமார் உள்ளிட்ட இலக்கியவாதிகளையும் வைகோ, திருச்சி சிவா எம்பி உள்ளிட்ட அரசியல்வாதிகளையும் செழியன், சுரேஷ்கண்ணன், ஆர்தர் வில்சன் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்களையும் காணமுடிந்தது.

விடுமுறை நாள்களில்தான் வியாபாரம் சூடுபிடிக்கும் என்று அனைத்துப் பதிப்பாளர்களும் பேசிக்கொண்டார்கள்.

பதிவு: ஹரன்பிரசன்னா


திலீப்குமார்



திருச்சி சிவா எம்.பி.




ஏஸியன் எஜுகேஷனல் சர்வீஸஸ்



ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன், எஸ்ரா, இயக்குநர் சுகா.




நவீன வேளாண்மை அரங்கு



கலை நிகழ்ச்சி



மேலே உள்ள புகைப்படத்தைப் பயன்படுத்துவோர் எனி இந்தியனின் முன் அனுமதி பெறுமாறு வேண்டுகிறோம்.