கூட்டம் கூட்டமாகப் பலர் வந்தாலும் விற்பனை என்னவோ மந்தமே. கூட்டம்கூட மாலைக்குப் பின்னரே அதிகமாக இருந்தது. 'காணும்' பொங்கல் கொண்டாடிவிட்டு வந்ததால் புத்தகங்களைக் கண்டு கொண்டாடிவிட்டுச் சென்றனர் மக்கள் என்று ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்.
ஒன்பது மணி வாக்கில் ஒரு அன்பர் ஓடோடி வந்து 'பகவத் கீதையா ஒரு இடத்துல அடுக்கி வெச்சிருந்தாங்க, அங்க புத்தகங்களையே காணமே' என்று வருத்தப்பட்டார். அதைக் கேட்டுக்கொண்டிருந்த விரக்தி அடைந்த பதிப்பாளர் ஒருவரை மனம்தேற்றி அனுப்பிவைத்தேன்.
சில பதிப்பாளர்கள் அவர்களது கருத்துகளைக் கூறியிருக்கிறார்கள். அதை ஒலிக்கோப்பாக ஏற்றியிருக்கிறேன். அவசியம் கேட்கவும்.
இன்றோடு புத்தகத் திருவிழா இனிதே முடிவடைந்தது. சில குறைகள் இருந்தாலும் மொத்தத்தில் பிரம்மாண்டமான ஒரு புத்தகக் காட்சியை நடத்தி முடிப்பது பெரிய செயல்தான். அதற்காக பபாஸிக்கு என் பாராட்டுகள். புத்தகக் காட்சி சில துளிகள் என சில விஷயங்களை எழுத நினைத்திருக்கிறேன். நேரம் இருந்து, மூடும் இருந்தால் எழுதுவேன்.
தொடர்ந்து எல்லா நாள்களும் வந்து புகைப்படங்களைப் பார்த்துச் சென்ற அனைவருக்கும் எனி இந்தியன் சார்பாகவும் என் சார்பாகவும் நன்றி.
பதிவு: ஹரன் பிரசன்னா

சா.கந்தசாமி

அமைச்சர் வேலு

நல்லி குப்புசாமி செட்டியார்
மேலே உள்ள புகைப்படங்களைப் பயன்படுத்துவோர் எனி இந்தியனிடம் முன் அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும்.
akilan kaNNan.WAV |
தமிழ்ப்புத்தகாலயம் அகிலன் கண்ணன்
Kalachuvadu kannan... |
காலச்சுவடு கண்ணன்
kv_shailaja.WAV |
வம்சி - கே.வி.சைலஜா
Manush.WAV |
உயிர்மை மனுஷ்யபுத்திரன்
ravi tamilvanan.WA... |
மணிமேகலைப் பிரசுரம் ரவி தமிழ்வாணன்
vaikarai.WAV |
பொன்னி வெளியீட்டகம் (சாளரம் பதிப்பகம்) - வைகறை