ஆவண முக்கியத்துவம் வாய்ந்ததும் சிறப்பான இலக்கிய வாசிப்பிற்கும் உரியதுமாக சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளது இந்நூல்.

கோபால் ராஜாராம் தனது முன்னுரையில் "தமிழில் சீரிய கலாசார முயற்சிகள் எல்லாமே சிறு பத்திரிகை இயக்கத்தினரால் தான் மேற்கொள்ளப்பட்டது. நாடக முயற்சிகளும் அதற்கு விதிவிலக்கல்ல. அதன் தொடர்ச்சிதான் ரங்கராஜன் மேற்கொண்ட "நாடக வெளி" பத்திரிகை வெளியீடு. இதன் பக்கங்களில் தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியாவெங்கிலும் நிகழ்ந்த முக்கிய நாடக நிகழ்வுகளும், உலக நாடக இயக்கத்தின் முக்கிய போக்குகளும் பதிவு பெற்றன. பல நாடகப் பிரதிகள் வெளியாயின. தமிழில் வெளிவந்த முக்கிய நாடகங்களின் வரலாற்றுப் பதிவாக பட்டியல் வெளியாயிற்று. நாடக ஆளுமைகள் பற்றிய அறிமுகங்களும், விமர்சனங்களும் வெளியாயின. இந்தத் தொகுப்பு "நாடக வெளி"யின் சாரமான படைப்புகளை உள்ளடக்கியது. ரசனைக்கும் ஆய்வுக்கும் உரித்தாகவேண்டிய இந்தத் தொகுப்பு" என்கிறார்.
வெளி இதழ்த்தொகுப்பு (தமிழின் ஒரு அரங்கியல் ஆவணம்)
தொகுத்தவர்: வெளி ரங்கராஜன் - பக்கங்கள்: 320 - விலை: 160
No comments:
Post a Comment