தொடர்புடைய பாலபாரதியின் பதிவு இங்கே.
திரு. பாலபாரதிக்கு,
புதிய புத்தகங்களை எனிஇந்தியன்.காமில் மாதம் இருமுறை (முதல், பதினைந்து தேதிவாக்கில்) வலையேற்றுகிறோம். எங்கள் வலைத்தளத்தில் இல்லாத புத்தகங்களைக்கூட Custom Order வழியாக வாங்க முடியுமென்பதால் புதிய புத்தகங்களை மாதம் இருமுறை மட்டுமே வலையேற்றுவதால் நுகர்வோருக்குச் சிரமம் ஏதுமில்லை. ஆனாலும், நண்பர்கள் மற்றும் பதிவர்கள் புத்தகங்கள் எழுதி அதை எனிஇந்தியனில் விற்கச் சொல்லும்போது, கூடுமானவரை அவர்களுக்கு உதவியே வந்துள்ளோம். மேலும், வலைப்பதிவர்கள் எழுதிய புத்தகங்களை எனிஇந்தியன்.காமின் முதல் பக்கத்தில் வைத்து ஆதரவளித்திருக்கிறோம். (உதாரணம்: மயிலிறகால் ஒரு காதல், சித்திரம் கரையும் வெளி, மருதம், கஜல், கானா, மு.க.)
'அவன் - அது = அவள்' என்கிற உங்கள் புத்தகம் எங்கள் கைகளுக்கு ஜூலை பதினைந்தாம் தேதிக்குப் பின்னரே பதிப்பாளர் மூலம் வந்தது. அதனால் அடுத்தமுறை புத்தகங்களை வலையேற்றும்போது (ஆகஸ்ட் 1 வாக்கில்) வலையேற்ற முடிவுசெய்யலாம் என்றிருந்தோம். நீங்கள் என்னைத் தொலைபேசியில் 25ம் தேதி (காலை 11:30 மணிக்கு) அழைத்து அப்புத்தகத்தை எனிஇந்தியன்.காமில் ஏற்றச் சொன்னீர்கள். அப்போதே நான் உங்களிடம் 'வார்த்தை' இதழ் தயாரிப்பில் இருக்கும் வேலைப்பளுவையும் பரபரப்பையும் சொல்லி, ஆனாலும் இரண்டு நாள்களில் ஏற்றுவதாகச் சொன்னேன். பதினைந்து நாள்களுக்கொருமுறை மட்டுமே நாங்கள் வலையேற்றுவதென்றாலும், நீங்கள் அழைத்தபோது இரண்டு நாள்களில் ஏற்றுவதாகச் சொன்னேன். அப்போது நீங்கள் இன்னும் அவசரம் என்று சொன்னபோது, இயன்ற அளவு எவ்வளவு சீக்கிரம் ஏற்ற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வலையேற்றுகிறேன் என்றே சொன்னேன். அதன் பின்னர், உங்கள் புத்தகத்தின் தலைப்பு 'அவன் - அது = அவள்' என்பது insensitive ஆக இருப்பதோடு மட்டுமில்லாமல் திருநங்கைகளையும் பெண்களையும் அவமதிப்பதாகவும் இருக்கிறதோ என்ற கேள்வி எழுந்தது. உங்கள் புத்தகம் திருநங்கைகளுக்கு ஆதரவானது என்றாலும் ஆண் பாலியல் குறி இல்லையென்றால் பெண் என்ற பொருள் வரும் அவன் - அது = அவள் என்ற தலைப்பு தங்கள் உணர்வுகளைப் புண்படுத்துகிறது என்று பெண்களும் திருநங்கைகளும் சொல்லக் கூடுமோ என்று எனிஇந்தியன் நிர்வாகம் யோசித்தது. அதனாலேயே உங்கள் புத்தகத்தை வலையேற்றுவது குறித்து முடிவு செய்ய இரண்டு நாட்களுக்கு மேலானது.
புத்தகங்களை வலையேற்றுவது குறித்து வரையறுக்கப்பட்டிருக்கிற திட்டப்படி எனிஇந்தியன்.காம் செயற்படுகிறது. ஆனாலும் பல நேரங்களில் பதிப்பாளர்களுக்கும் நண்பர்களுக்கும் இவ்விஷயத்தில் உதவும்பொருட்டுச் சிலநேரங்களில் புத்தகங்களை மாதத்தில் பலமுறைகூட வலையேற்றுகிறோம். இப்படிப் பலமுறை வலையேற்றுவது எங்களுக்கு இருக்கும் நேரத்தைப் பொருத்தது. ஆனால், இதுகுறித்து யாரும் எனிஇந்தியன்.காமுக்கு நெருக்குதல் தருவது சரியில்லை. புத்தகங்களை உடனடியாக வலையேற்ற வேண்டும் என்ற தங்கள் அவஸ்தையில் நாங்கள் பதினைந்து நாட்களுக்கு மேலாக புத்தகங்களை வலையேற்றாமல் அவதிப்பட்டதாகத் தாங்கள் சொல்வது உண்மையில்லை.
நாங்கள் முடிவெடுப்பதற்குள் தாங்கள் முடிவுசெய்து புத்தகம் வேறு தளங்களில் கிடைக்கும் என்று அறிவித்த செய்தியை வாசித்தோம். தங்கள் புத்தகம் அத்தளங்களின் வழியே சிறப்பாக விற்பனையாகவும் வெற்றியடையவும் எனிஇந்தியன்.காமின் வாழ்த்துகள்.
ஹரன் பிரசன்னா
இயக்குநர்
எனிஇந்தியன்.காம்
Thursday, July 31, 2008
Wednesday, July 9, 2008
'வார்த்தை' ஜூலை 2008 இதழில்...

* தாய்நாட்டன்புறு தனையர் இங்கிருமின் (அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தம்) - கோபால் ராஜாராம்
* சரஸ்வதி வ. விஜயபாஸ்கரன், ஜெயகாந்தன், கே.எம். விஜயன் உள்ளிட்ட பலர் எழுதிய வாசகர் கடிதங்கள்
* சென்ற இதழில் வெளியான கே.எம். விஜயன் கட்டுரைக்குப் ப. திருமாவேலனின் எதிர்வினை
* தொலைவெளி நெருக்கம்: கவிதையின் கை - சுகுமாரன்
* சு. வெங்கடேசனின் 'உ.வே.சா. சமயங் கடந்த தமிழ்' - கோ.ந. முத்துக்குமாரசுவாமி
* மே தெல்மிசானியின் துன்யாசத் - தமிழில்: அ. கிரிதரன் ராஜகோபாலன்
* எதைப்பற்றியும் (அல்லது) இது மாதிரியும் தெரிகிறது - வ. ஸ்ரீனிவாசன்
* தமிழில் தோன்றிய புதுவகை இயக்கமும், சில விமர்சனங்களும் தாத்பரியங்களும் - தமிழவன்
* பெ.சு. மணியின் நீதிக்கட்சியின் திராவிடன் நாளிதழ் ஓர் ஆய்வு - கல்பனாதாசன்
* சொப்பு விருந்து - எஸ். ஷங்கர நாராயணன்
* சுதந்திரப் போராட்டக் களத்திலிருந்து: பாரதியின் பாஞ்சாலி சபதம் சுதேசிப் போராட்டத்தின் புரட்சிக்களம் - வி. வெங்கட்ராமன்
* விஞ்சை விலாஸின் சுவை - சுகா
* கலாப்ரியா, தாராகணேசன், கே. பாலமுருகன், பா. சத்தியமோகன், முத்துக்குமார் கவிதைகள்
* ஆபிதினின் 'உயிர்த்தலம்': பொங்கிவழியும் அங்கதமும் நீண்டு செல்லும் கதையாடலும் - கீரனூர் ஜாகீர் ராஜா
* பாலரிஷி - சுப்ரபாரதிமணியன்
* வேணுகோபால் Vs அன்புமணி: தனிமனித அடிப்படை உரிமையும் யதேச்சதிகார ஜனநாயகமும் - கே.எம். விஜயன்
* நேபாளம் - எச்சரிக்கை இணைந்த எதிர்பார்ப்பு - கோபால் ராஜாராம்
* ஆர். வைத்தியநாதனின் ஜாதி என்னும் சமூக மூலதனம் (ஏன் கவுண்டர்கள், நாடார்கள், மார்வாரிகள், கச்சிகள் ஆகியோர் சிறப்புடன் வாழ்கிறார்கள்?) - தமிழில்: துகாராம் கோபால்ராவ்
* குட்டப்பன் கார்னர் ஷோப் - இரா. முருகன்
* இசையின் விதையும் விதையின் இசையும் - சேதுபதி அருணாசலம்
* தேடலின் தடங்கள் (பாவண்ணனின் 'துங்கபத்திரை') - எஸ். ஜெயஸ்ரீ
* ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி
இவற்றோடு-
* கார்ட்டூன்
* புதிதாய்ப் படிக்க
* மாவோயிஸ்டு தியாகு சமீபத்தில் ஜெயகாந்தனைப் பற்றிச் சொன்ன கருத்துகள் தொடர்பான கேள்விகளுக்கு ஜெயகாந்தனின் பதில்கள்
வார்த்தை ஜூன் 2008 இதழில்...
* வாசகர் கடிதங்கள்
* மே இதழில் வெளியான வெளி ரங்கராஜனின் கட்டுரைக்கான கோ.ந. முத்துகுமார சுவாமியின் எதிர்வினை
* மொசுறு - நாஞ்சில் நாடன்
* தொலைவெளி நெருக்கம்: சொல்லுக்குள் பாயும் எரிமலைக் குழம்பு - சுகுமாரன்
* இரண்டே அறைகள் கொண்ட வீடு - யுவன் சந்திரசேகர்
* சுதந்திரப் போராட்டக் களத்திலிருந்து: தேசியம் வளர்த்த 'சங்கு'வின் எழுச்சியும் வீழ்ச்சியும் - வி. வெங்கட்ராமன்
* கிரீமி லேயர் பட்டியல் - தமிழில்: ஹரன் பிரசன்னா
* இடஒதுக்கீடு: மாயைகளால் மறைக்கப்படும் உண்மை - சாவித்திரி கண்ணன்
* இடஒதுக்கீடு அரசியல் - கே.எம். விஜயன்
* நோவா (அறிவியல் புனைகதை) - தமிழ்மகன்
* சாலை விபத்துகளும் தமிழ் சினிமாவும் - வெளி ரங்கராஜன்
* ·பிரான்சில் என்ன நடக்கிறது - நாகரத்தினம் கிருஷ்ணா
* ஊடுருவிப் பார்க்கும் கண்கள் (பாவண்ணனின் நதியின் கரையில்) - எஸ். ஜெயஸ்ரீ
* எதைப் பற்றியும் அல்லது இதுமாதிரியும் தெரிகிறது. வ. ஸ்ரீனிவாசன்
* அனிதா. ச. முத்துவேல், வே. முத்துக்குமார், மதுமிதா, க. அம்சப்பிரியா, செந்தமிழ் மாரி கவிதைகள்
* மாற்றம் - பொன்னையன்
* குட்டப்பன் கார்னர் ஷோப் - இரா. முருகன்
* ஒலிம்பிக் பந்தம்: அரசியலும் தேசப்பற்றும் - மு. இராமனாதன்
* ஏ.ஜே.பி. தைலரின் மார்க்சியம் ஒரு மீள்நோக்கு - தமிழில்: மணி வேலுப்பிள்ளை
* ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி
இவற்றோடு -
* "அகண்ட பாரதம், ஒரே கலாசாரம், ஹிந்துத்துவம் கொண்டு எழுதிய விஷ்ணுபுரம், உலகத்திலேயே உயர்ந்த கொள்கைகளைத் தந்த பொதுவுடைமையைக் கீழ்த்தரமாக விமர்சித்து எழுதிய பின்தொடரும் நிழலின் குரல் என்ற புத்தகம் - இவற்றை எழுதிய ஜெயமோகனுக்கு ரூபாய் இரண்டு லட்சம் கொடுத்து உதவியது தவறு என்பது என் கருத்து. தங்கள் கருத்து என்ன?"
* "இந்தியாவில் கம்யூனிச ஆட்சி ஏற்பட்டால் எப்படி இருக்கும்?"
* "தங்களுக்குப் பிடித்த கதையான குருபீடம் எழுத நேர்ந்ததன் பின்னணி என்ன?"
- உள்ளிட்ட பல கேள்விகளுக்கு ஜெயகாந்தனின் கூர்மையான நேர்படப் பேசும் பதில்கள்.
* நிகழ்வு: தமிழ்சேவைக்கு இயல்விருது - அ. முத்துலிங்கம்
* புதிதாய்ப் படிக்க - நூல் அறிமுகங்கள்
* கார்ட்டூன்
* தலையங்கம் - இடஒதுக்கீடு குறித்து பி.கே. சிவகுமார் எழுதிய விரிவான கட்டுரை
Tuesday, July 1, 2008
எனி இந்தியன் பதிப்பகத்தின் இரண்டு புதிய புத்தகங்கள்
தமிழ் ஓசையில் 'இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்'
அமுத சுரபியில் 'வாஸந்தி கட்டுரைகள்' விமர்சனம்
Subscribe to:
Posts (Atom)